தமிழில் சில படங்களில் வில்லனாக நடித்தவர் “ஆர்.கே.சுரேஷ்”. இவர் வில்லனாக நடித்த தாரைதப்பட்டை, மருது படங்களில் வில்லனின் மாஸ் நடிப்பை காட்டியிருந்தார். மாஸான வில்லனாக வலம் வந்த ஆர்.கே.சுரேஷ் சினிமா தயாரிப்பாளராவார்.
விழுப்புரம் மாவட்டதத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 10 கோடி கடன் பெற்றுத்தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் வரை பெற்றிருக்கிறார். தொழிலதிபர் ராமமூர்த்திக்கு அந்த பணம் கிடைக்கவில்லை.
அவர் இறந்தபோன நிலையில் தொழிலதிபர் ராமமூர்த்திக்கு பணம் பெற்றுத்தருவதற்காக ஆர்.கே.சுரேஷை அறிமுகம் செய்த கமலக்கண்ணன் என்பவர் இதே போன்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

கைதாகிய விவரமறிந்த ராமமூர்த்தியின் மனைவி வீனா காவல்துறையில் புகாரளித்தார். பாஜகவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஆர்.கே.சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டிய நிலையில்,நேராக சென்னை காவல் ஆனையர் அலுவலகத்தில் புகார் அளித்தார் வீனா.
மேலும் முதல்வர் ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் பக்கத்திலும் புகார் அளித்துள்ளாராம். இதனால் இந்த வழக்கு கூடியவிரைவில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். மேலும் யார் மேல் தவறு என்பதை தற்போது போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.