Actor Ajith: இப்போதெல்லாம் கதை நன்றாக இருக்கிறதோ இல்லையோ படத்தை பிரமாண்டமாக 200, 300 கோடி பட்ஜெட்டில் எடுத்து விடுகிறார்கள். ஆனால் அதில் பல படங்கள் போட்ட காசை கூட எடுக்காமல் திணறி இருக்கிறது.
ஆனால் வெறும் 70 கோடி பட்ஜெட்டில் 2000 கோடி வசூலித்த ஒரு படமும் இருக்கிறது. அந்த வகையில் அஜித்தின் நண்பரும், பாலிவுட் டாப் நடிகருமான அமீர்கான் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தங்கல் படம் தான் இந்த சாதனையை படைத்தது. மல்யுத்த விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தை அமீர்கான் தயாரித்திருந்தார்.
மல்யுத்தத்தில் தன்னால் சாதிக்க முடியாததை தன் மகள்களை வைத்து சாதிக்க நினைக்கும் அப்பாவாக அவர் நடித்திருப்பார். பொதுவாக விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட எந்த படங்களும் தோல்வியை சந்தித்தது கிடையாது. அப்படித்தான் இந்த தங்கல் படத்திற்கும் ரசிகர்களின் அமோக வரவேற்பு கிடைத்தது.
Also read: மொத்த பிஸினஸையும் ஒரே செக்கில் முடித்துவிட்ட மாறன் அண்ட் கோ.. சன் பிக்சர்ஸ் இடம் சிக்கிய விடாமுயற்சி
பெண்கள், குடும்ப ஆடியன்ஸ் என அனைவரும் இப்படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். மொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த இப்படம் 2024 கோடிகளை வசூலித்து கெத்து காட்டியது. அது மட்டுமின்றி ஏகப்பட்ட விருதுகளையும் தட்டி தூக்கியது.
மேலும் இப்படத்தின் வசூல் சாதனையை இதுவரை எந்த படங்களும் முறியடிக்கவில்லை. உலக சாதனை படைத்த பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் உள்ளிட்ட படங்கள் எல்லாம் இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தான் இருக்கிறது. இப்படி பெரும் பெருமைக்கு சொந்தக்காரராக இருக்கிறார் இந்த பாலிவுட் சுல்தான்.
Also read: விடாமுயற்சியை ஓரம் கட்டிட்டு சென்னை திரும்பிய திரிஷா.. நிற்க நேரமில்லாமல் பறப்பதற்கு காரணம் இதுதான்