வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஷாலுக்கு சொம்படிக்கும் நட்பு வட்டாரம்.. பலகோடி நஷ்டம், கண்டுகொள்ளாத விருமன்

சமீபகாலமாக விஷாலின் படங்கள் எதுவும் வெளியாகாமல் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவர் மீது தொடர்ந்த வரும் குற்றச்சாட்டுகள் தான். அதாவது விஷால் ஷூட்டிங்கு சரியாக வருவதில்லையாம். இதனால் விஷாலை வைத்து படம் இயக்க தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனர்.

விஷாலின் நண்பர்கள் அவரை வைத்த லத்தி என்ற படத்தை தயாரித்தார்கள். இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் செப்டம்பர் 15 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தேதியிலும் படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான். இது தவிர விஷால் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Also Read : பாக்கியராஜ்க்கு ஆப்பு வைத்த விஷால்.. இப்ப எல்லாம் நாங்க தான்

இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்த வருகிறார். ரிதுவர்மா, எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு 40 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் சென்ற விஷால் அதற்கு பின்பு சூட்டிங் செல்வதில்லையாம்.

இதனால் தயாரிப்பாளர் சூட்டிங்காக பல கோடி செலவு செய்து செட் அமைத்துள்ளார். விஷால் வராததால் தயாரிப்பாளருக்கு தற்போது மூன்று கோடி நஷ்டம் ஆகி உள்ளது. இந்நிலையில் விஷால் தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் செயலாளர் ஆக இருப்பதால் கார்த்தி இடம் இது குறித்து மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர் புகார் கொடுத்துள்ளார்.

Also Read : சீரியல்களுக்கு ஆப்பு வைத்த விஷால்.. விட்டா கிறுக்கன் ஆக்கிருவாங்க போல

கார்த்தி விஷால் தன்னுடைய நண்பர் என்பதால் புகாரை ஏற்றுக் கொள்ளாமல் பேசிக்கலாம் போங்க என சமாளித்துள்ளார். சரி விஷால் இடமே போய் நீதி கேட்கலாம் என்றால் நான் உதயநிதியின் நண்பன், உங்களால் ஒன்னும் செய்ய முடியாது என பில்டப் கொடுத்துள்ளார்.

விஷாலை எதிர்த்து நீதி கேட்க செல்லும் இடமெல்லாம் விஷாலின் நட்பு வட்டாரமாக இருப்பதால் தற்போது வரை இதற்கு நீதி கிடைக்காமல் உள்ளது. இதனால் விஷாலும் திமிரு காட்டுவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மொத்தத்தில் அந்த தயாரிப்பாளர் விஷாலை நம்பி பல கோடி நஷ்டத்தை சந்தித்து தலையில் துண்டை போட்டது தான் மிச்சம் .

Also Read : உதயநிதிக்கே அல்வா கொடுக்கும் விஷால்.. படாத பாடுபடும் பெரும் முதலாளிகள்

Trending News