புதன்கிழமை, ஜனவரி 15, 2025

3 பேரும் சேர்ந்தாலே ஹிட்டு தான்.. சசிகுமாருக்கு தோள் கொடுக்கும் நண்பர்கள்

சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அயோத்தி திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. தியேட்டரில் மட்டுமல்லாமல் ஓடிடி தளத்திலும் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இந்த திரைப்படத்தை சூப்பர் ஸ்டாரும் பாராட்டி இருந்தார். இதைத்தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இவருடைய சில திரைப்படங்கள் தோல்விகளை சந்தித்தாலும் சசிகுமாருக்கு தோள் கொடுத்து தூக்கிவிடும் சில நண்பர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் திரையுலகில் மும்மூர்த்திகள் என்று சொல்லப்படும் ஒரு கூட்டணி வெற்றி கூட்டணியாக பார்க்கப்படுகிறது. இவர்கள் இணைந்தாலே அப்படம் நிச்சயம் ஹிட் என்ற கருத்தும் இருக்கிறது.

Also read: விஜயகாந்தின் வாரிசுடன் கூட்டணி போடும் சசிகுமார்.. 13 வருடம் கழித்து எடுக்கும் புது அவதாரம்

அந்த வகையில் சசிகுமார், சமுத்திரக்கனி, தம்பி ராமையா மூவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியும். அதில் தம்பி ராமையா ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பை வித்தியாசமான முறையில் காட்டி விடுவார். அதனாலேயே இவரை முதல் ஆளாக சசிகுமார் மற்றும் சமுத்திரகனி இருவரும் தங்கள் படங்களில் நடிக்க கமிட் செய்து விடுவார்கள்.

அப்படி இவர்களின் கூட்டணியில் வெளிவந்த எத்தனையோ திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதேபோன்று சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம், ஈசன் ஆகிய திரைப்படங்களில் சமுத்திரக்கனிக்கு ரொம்பவும் கனமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.

Also read: அயோத்தியின் வெற்றியை தொடர்ந்து சசிகுமாருக்கு ரிலீஸ் ஆகும் 4 படங்கள்.. மீண்டும் சுக்கிர திசை ஆரம்பித்துவிட்டது

மேலும் சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள், போராளி போன்ற திரைப்படங்களும் சசிகுமாருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. இப்படி இந்த நண்பர்கள் ஒருவரை ஒருவர் வெற்றி பெற வைத்து கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் தம்பி ராமையாவின் மகன் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் சமுத்திரகனியும் இணைந்துள்ளார்.

விளையாட்டு சம்பந்தப்பட்ட அந்த திரைப்படத்தில் அவர் கோச்சாக நடிக்கிறார். இப்படி நட்புடன் இருக்கும் இந்த மும்மூர்த்திகள் இப்போது ஒரு திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்களாம். அதுமட்டுமல்லாமல் பொதுவெளியில் கூட இந்த மூவர் கூட்டணியை அடிக்கடி நாம் பார்க்க முடியும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Also read: முதல் பாகம் சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம் குப்பையாக மாறிய 6 படங்கள்.. ஒரே பாணியில் வெளியாகி சலிப்பைத் தட்டிய சாட்டை 2

Trending News