திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தனுஷ் முதல் ரஜினி வரை மரண ஹிட் கொடுக்கும் அனிருத்.. ஒட்டவே முடியாத அளவிற்கு சர்ச்சையை கூட்டிய சிம்பு

Simbu: தற்போது முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களின் படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு முக்கிய காரணம் அனிருத்தின் தாறுமாறான இசைதான் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு மரண ஹிட் கொடுத்து வருகிறார். முக்கியமாக தனுஷ் மற்றும் ரஜினிக்கு இசையின் வெற்றி நாயகனாக இருந்து வருகிறார். அப்படிப்பட்ட இவர் தற்போது வரை சிம்புவின் பக்கம் எட்டிக்கூட பார்க்காமல் இருக்கிறார்.

அதற்கு காரணம் இவர்களுக்குள் ஏற்பட்ட விரிசல் தான் என்று சொல்லலாம். அதாவது சர்ச்சைக்கும், பிரச்சனைக்கும் மறு உருவமாக இருக்கிறவர் சிம்பு. அவரிடம் தெரியதனமாக வளர்ந்து வரும் நேரத்தில் மாட்டிக் கொண்டு அனிருத் அவருடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு சிம்பு மற்றும் அனிருத் ஒரு ஆல்பம் சாங் ஒன்றை ரெடி பண்ணினார்கள்.

Also read: பட்ஜெட்டை முடிவு செய்த கமல்.. முழுசா முடி வளர்த்த சிம்புவுக்கு காட்டிய க்ரீன் சிக்னல்

ஆனால் அந்தப் பாடல் சர்ச்சையாக வெடித்து பூகம்பத்தை ஏற்படுத்தியது. அதாவது அந்தப் பாடலுக்கு பீப் சாங் என்று பெயர் வைத்து விட்டார்கள். அந்த அளவிற்கு வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு மிகவும் கொச்சையாக இருக்கும். அதிலும் பெண்களைக் குறித்து தவறான வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பார்கள்.

இதனால் அந்த சமயத்தில் கோயம்புத்தூர் மாதர் சங்கத்தில் இருந்து சிம்பு மற்றும் அனிருத் மீது புகார் அளித்தார்கள். அத்துடன் இவர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த பெண்களும் ஒன்று திரண்டு போர் கொடியை தூக்கி போராட்டம் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீதும் வழக்கு விசாரணை செய்யப்பட்டது.

Also read: கோர்ட்டுக்கு போயும் பிரயோஜனம் இல்ல.. சிம்பு மீது கொலகாண்டில் இருக்கும் முதலாளி

அப்பொழுது சிம்பு இந்த ஆல்பம் சும்மா வீட்டில் நாங்கள் டைம் பாஸுக்கு ரெடி பண்ணினோம். இதை எந்த காரணத்தை கொண்டும் ரிலீஸ் பண்ண கூடாது என்ற முடிவோடு தான் நாங்கள் இருந்தோம். ஆனால் அது எப்படியோ அனிருத்தின் நண்பர்கள் வலைதளங்களில் தெரியாமல் போட்டு விட்டார்கள் என்று சிம்பு கூறியிருந்தார்.

இதனால் அனிருத் அப்போதிலிருந்து இப்போது வரை சிம்புவிடம் ஒட்டவே இல்லை.அந்த வகையில் இவர்கள் இருவரும் அடுத்து எந்த ஒரு பாடல்களிலும் இணையவில்லை. என்னதான் சிம்பு தற்போது எல்லா சேட்டைகளையும் மூட்டை கட்டிவிட்டு நல்ல பிள்ளையாக இருந்தாலும் ஆரம்பத்தில் செய்த பாவம் விடாமல் இவரை துரத்திக் கொண்டுதான் வருகிறது.

Also read: மணிரத்தினத்திடம் எடுபடாமல் போன சிம்புவின் சில்மிஷங்கள்.. பாம்பு புற்றிலே மகுடி வாசிச்சாலும் வேலைக்காகல

Trending News