வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கயல் முதல் பாக்கியலட்சுமி வரை.. இளசுகளின் இஷ்டமான டாப் 5 சின்னத்திரை நடிகைகள்

சின்னத்திரை மூலம் சீரியல் நடிகைகள் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதிலும் ஒரு சில நடிகைகள் ஆரம்பத்தில் சீரியலில் நடித்த பின் திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விடுகின்றனர். இவர்களில் தற்போது டாப் 5 லிஸ்டில் உள்ள இளசுகளின் மனதைக் கவர்ந்த சின்னத்திரை நடிகைகளின் லிஸ்ட் வெளியே உள்ளது.

எதிர்நீச்சல்-ஜனனி: எதிர்நீச்சல் சீரியலில்  கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. இவர் பெங்களூரை பூர்விகமாக கொண்டு கன்னட நடிகையாக தனது நடிப்பு வாழ்க்கை தொடங்கி பின் சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளை கைவிட்டு அதிலிருந்து டிஜிட்டல் வாழ்க்கைக்கு ஏற்றவாறு ஆண்களைப் போல பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்ற கோட்பாட்டில் எதிர்த்துப் போராடும் ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் மதுமிதா ஜனனி ஆக நடித்துள்ளார்.

பெண்கள் என்றால் அடிமையாக தான் இருக்க வேண்டும் என்ற நிலை மாற வேண்டும் என்ற எண்ணத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் மதுமிதா ரசிகர்கள் மனதில் டாப் 5 லிஸ்டில் 5-வது இடத்தில் உள்ளார்.

கண்ணம்மா: பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக முன்பு நடித்துக் கொண்டிருந்த ரோஷினி ஹரிப்ரியனுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இறந்த நிலையில், அவர் திடீரென்று சீரியல் இருந்து விலகியதும் பலரும் கலங்கினார்கள்.

இருப்பினும் அதன் பிறகு கண்ணம்மாவாக வினுஷா தேவி என்ட்ரி கொடுத்தார். தொடக்கத்தில் இவருடைய நடிப்புக்கு போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும், அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்து டாப் 5 சின்னத்திரை நடிகைகளின் லிஸ்டில் 4-ம் இடத்தில் இருக்கிறார்.

Also Read: 2022 ஆம் ஆண்டின் டாப் 10 சீரியல்கள்.. இந்த ஆண்டு முழுவதும் டஃப் கொடுத்த ஒரே சீரியல்

சுந்தரி: சுந்தரி சீரியலில் நடித்து வருபவர் கேப்ரில்லா செல்லஸ், இவர் டிக் டாக் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சுந்தரி சீரியலில் சுந்தரி என்னும் கதாபாத்திரத்தில் மிக அருமையாக தனது நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒரு பெண் சாதிப்பதற்கு நிறம் காரணம் அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக கேபிரில்லா செல்லஸ் உள்ளார்.

சுந்தரி என்ற கருப்பு நிறம் கொண்ட கிராமத்து பெண் தோற்றத்தில் நடித்துள்ளார். ஒரு பெண் அதற்கு எதிராக வரும் கேலி கிண்டல் மற்றும் அவமானங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சின்னத்திரை சீரியல் தனது கதாபாத்திரத்தின் மூலம் ஒரு விழிப்புணர்வாக உணர்த்துகிறாள். சுந்தரி சீரியலில் நடித்து வரும் கேப்ரில்லா செல்லர்ஸ் ரசிகர்கள் மனதில் டாப் 5 லிஸ்டில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

பாக்கியலட்சுமி: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இல்லத்தரசிகள் படும் பாடுகளையும், அவர்களுக்கு கொடுக்கப்படும் பொறுப்புகளையும் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா கச்சிதமாக நடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை அவருடைய கணவர் விவாகரத்து செய்துவிட்டு 2-வது திருமணம் செய்து கொண்டாலும் அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் தன்னுடைய குடும்பம் பிள்ளைகளுக்காக துணிவுடன் நடை போடுகிறார். சின்னத்திரை ரசிகர்களுக்கும் மட்டுமல்லாமல் இளசுகளையும் கவர்ந்திருக்கும் பாக்கியலட்சுமி டாப் 5 இரும்புத்திரை நடிகைகளின் லிஸ்டில் 2-ம் இடத்தை பிடித்திருக்கிறார்.

Also Read: இணையத்தை தெறிக்க விடும் இந்த வார டிஆர்பி லிஸ்ட்.. வந்த வேகத்திலேயே டஃப் கொடுக்கும் புது சீரியல்

கயல்: சின்னத்திரையில் கன்னடம் மற்றும் தமிழில் மிகப் பிரபலமாக உள்ளார். கல்லூரி நாட்களில் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதன் மூலம் சின்னத்திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் உலகில் சின்ன திரையில் “கல்யாணம் முதல் காதல்” வரை என்ற தொடரில் நடித்த மாபெரும் வெற்றி பெற்றார். மேலும் ஜீ தமிழ் சேனலில் “யாரடி நீ மோகினி “என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் அசத்தலாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.

தற்பொழுது சன் டிவியில் கயல் சீரியலில் தனது கதாபாத்திரத்தை ஏற்று மிகக் கச்சிதமாக சிறப்பாக நடித்துள்ளார். இதில் மிகப் பொறுப்பான குடும்பத்தை தாங்கும் சக்தியாக விளங்குகிறாள்.சீரியலில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனையையும் எவ்வாறு திறம்பட சமாளிப்பது என்பதை மிகத் துல்லியமாகவும் கச்சிதமாகவும் கையாண்டு அதற்கான வெற்றியை பெறுகிறார்.

ஒரு பெண்ணாக இருந்து சமூகத்தில் எவ்வளவு தைரியமாக இருக்க வேண்டும் என்றும் தனக்கான உரிமையை எவ்வாறு போராடி பெற வேண்டும் என்பதற்கு உதாரணமாக கயல் உள்ளார். ஆண் பெண் நட்பு என்பது காதலில் போய் முடியாமல் கடைசிவரையிலும் தோள் கொடுக்கும் தோழனாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பவர். கயல் சீரியலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி சின்னத்திரை ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்துள்ளார் .

Also Read: 2 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த விஜய் டிவி பிரபலம்.. அதிரடியாக கைது செய்த காவல்துறை

இவ்வாறு சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களுக்கு பிடித்தமான டாப் 5 சின்னத்திரை நடிகைகளாக இருந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர் .

Trending News