வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மாநகரம் முதல் லியோ வரை.. ஒவ்வொரு படத்திற்கும் லோகேஷ் எடுத்துக்கொண்ட ஷூட்டிங் நாட்கள் இதுதான்

Lokesh Kanagaraj: இந்திய அளவில் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் தரமான படங்களை கொடுத்துக் கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் விஜய்யுடன் இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து வரும் அக்டோபர் 19 ஆம் தேதி சர்வதேச அளவில் படத்தை ரிலீஸ் செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்திற்குப் பிறகு அடுத்ததாக லோகேஷுக்கு தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் நிறைய பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் லோகேஷ் ஆரம்பத்தில் இருந்தே திட்டமிடல் என்பதை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இவர் ஒவ்வொப்பு படத்திற்கும் என்று குறிப்பிட்ட நாளை ஒதுக்கி அதே தினத்தில் படத்தையும் முடித்து விடுவது தான் லோகேஷ் உடைய கில்லாடித்தனம்.

Also Read: தயாரிப்பாளர்களால் ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் 3 படங்கள்.. தளபதி இயக்குனருக்கு வந்த சோதனை

அந்த வகையில் இவர் மாநகரம் முதல் லியோ வரை, குறித்த நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்தி வருகிறார். தமிழ் சினிமாவிற்கு மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ், அந்த படத்தை வெறும் 45 நாட்களில் எடுத்து முடித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து அவருடைய சினிமா கேரியருக்கு மிகவும் முக்கிய திருப்பு முறையாக அமைந்த படம் தான் கைதி, கார்த்தியை வைத்து இயக்கிய இந்த படத்தை ஒட்டுமொத்தமாக 65 நாட்களில் எடுத்து முடித்திருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் மட்டுமே எடுக்கப்பட்டது. அதுதான் இந்த படத்தின் பிளஸ் ஆகவும் அமைந்தது.

Also Read: ஒரே வார்த்தையில் மாஸ் காட்டிய 5 ஹீரோக்கள்.. தெறிக்க விட்ட ஆண்டவரின் டயலாக்

இந்த படத்திற்கு அடுத்ததாக விஜய்யை வைத்து லோகேஷ் எடுத்த மாஸ்டர் திரைப்படம் 130 நாட்களில் எடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உலக நாயகனுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விக்ரம் படம் 115 நாட்களில் எடுத்து முடித்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தை ஒட்டுமொத்தமாக 125 நாட்களிலேயே எடுத்து முடித்துள்ளார்.

அதிலும் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் உறை பனி மத்தியில் 52 நாட்கள் ஷூட்டிங்கை நடத்தி சாதனை புரிந்தனர். இவ்வாறு ஒவ்வொரு படத்தையும் லோகேஷ் குறித்த நாட்களில் முடிக்கிற காரணத்திற்காகவே அவரை அடுத்தடுத்து டாப் ஹீரோக்கள் புக் செய்து வருகின்றனர்.

Also Read: விஜய் அரசியலுக்குள் நுழைவது இவரை எதிர்க்கத்தான்.. பல வருடங்கள் தொடரும் பகை

Trending News