வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பராசக்தி தொடங்கி மாமன்னன் வரை.. பா ரஞ்சித்திற்கு நாசுக்காக பதிலடி கொடுத்த உதயநிதி

Actor Udhayanidhi : தன் படத்தின் மூலம் சமூக கருத்தினை வெளிப்படுத்தும் விதமாய், பரபரப்பை ஏற்படுத்தும் இயக்குனர் தான் பா ரஞ்சித். இந்நிலையில் மாமன்னன் படம் குறித்து இவர் மொழிந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின், தற்பொழுது இச்செய்தி இணையதளத்தில் மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த படம் தான் மாமன்னன். சமூகத்தில் அனைவரையும் சமமாக கருத வேண்டும் என்ற குறிக்கோளையும், ஒடுக்கப்படும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், மேலும் அரசியலிலும் ஆதிக்க சாதியினர் உடன் சரிசமமாக பயணிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாய் கதை அமைக்கப்பட்டு இருக்கும்.

Also Read: பூஜையே போடல அதுக்குள்ள இத்தனை கோடியா.? வாய் பிளக்க வைத்த KH-233

இக்கதைக்குரிய கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் உதயநிதி ஸ்டாலின். இப்படத்தின் கதை பல விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பா ரஞ்சித் உதயநிதி நடிப்பை பாராட்டியும் மேலும் சமூக நீதி பேசுகிற கட்சியில் இருந்தும் ஊமையாக இருப்பதன் குறித்து பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து அதற்கு பதிலடியாக உதயநிதி தன் டிவிட்டர் பக்கத்தில், இயக்குனர் ரஞ்சித்திற்கு மிகுந்த நன்றியை தெரிவித்தவாறு கூறியுள்ளார். மேலும் எந்த கழகமாக இருந்தாலும் அங்கு ஏற்படும் இது போன்ற சாதி பாகுபாடு அறவே ஒழிக்கப்பட வேண்டும். அதை உணர்த்தும் விதமாய் படம் ஏற்று நடித்ததாகவும் கூறியுள்ளார்.

Also Read: ஒரே இடத்தில் படப்பிடிப்பை நடத்த போகும் தனுஷ்.. மாசாக வந்துள்ள 50வது பட அப்டேட்

எந்த உயிராயினும் அவற்றை சமமாக கருத வேண்டும் சாதி பாகுபாடு கொண்டு பிரிவினை ஏற்படுத்த ஒரு பொழுதும் ஊக்குவிக்கக் கூடாது என்பதை பராசக்தி படத்திலேயே தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் போதே சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டு இது போன்ற பிரிவினை ஏற்படக்கூடாது என்பதற்கு தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவித்தார்.

அதைக் கொண்டே தற்போது மாமன்னன் படத்தில் கலைவடிவங்களிலும் இது போன்ற சாதி பாகுபாடுகள் அறவே கலையப்பட வேண்டும் என்பதையும் உணர்த்தியதாகவும் நாசுக்காய் பா ரஞ்சித்திற்கு பதிலடி கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். மேலும் இவரின் இத்தகைய செய்தி தற்போது சோசியல் மீடியாவில் கூடுதல் சுவாரிசத்தை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: 90களில் சினிமாவை வெறுத்த ரஜினி.. இரண்டாவது இன்னிங்ஸில் சூப்பர் ஸ்டார் கேரியரை தூக்கி நிறுத்திய இயக்குனர்

Trending News