Thalaivar 171: சம்மர் வந்து விட்டாலே குழந்தைகள் அனைவருக்கும் கொண்டாட்டமாக தான் இருக்கும். அதே போல் திரையுலகமும் பரபரப்பாக இயங்க ஆரம்பித்து விடும்.
கோடை விடுமுறையை டார்கெட் செய்துதான் டாப் ஹீரோக்கள் தங்கள் படங்களை வெளியிடுவார்கள். ஏனென்றால் மொத்தமாக கிடைக்கும் விடுமுறை நாட்களில் அதிக கலெக்சனை பெற முடியும்.
அந்த வகையில் இந்த வருட கோடைக்கு பல படங்கள் வெளிவர இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த மாதம் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளிவந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்ய உள்ளது.
தங்கலான் தரப்போகும் சர்ப்ரைஸ்
அந்த வரிசையில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த தங்கலான் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் விரைவில் வெளிவர இருக்கிறது. அதன்படி வரும் 17ஆம் தேதி விக்ரம் பிறந்த நாளன்று இந்த அறிவிப்பு வர இருக்கிறது.
மேலும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வர இருக்கிறது. அடுத்ததாக ஏப்ரல் 22ம் தேதி தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் வெளிவருகிறது.
மேலும் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியின் எல்ஐசி படத்தின் டீசரும் இந்த மாத இறுதியில் வருகிறது. அதேபோல் கங்குவா படத்தின் மாஸ் அப்டேட்டும் இந்த மாதம் வெளிவர இருக்கிறது.
இப்படி இந்த மாதம் முழுக்க திருவிழா போல் கலை கட்ட உள்ளது. இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் தற்போது ஒவ்வொரு அப்டேட்டையும் கொண்டாடுவதற்கு ஆயத்தம் ஆகி வருகின்றனர்.