நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், #FromTheSetsOfBEAST என்ற ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் பிறந்தநாள் பீஸ்ட் பட செட்டில் கொண்டப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் பங்கேற்றுள்ளனர்.
இந்த பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அடுத்தடுத்து விஜய் படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது. இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் நியூ லுக்கில் விஜய் இருக்கும் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து உள்ளனர்.

சும்மாவே விஜய் ரசிகர்கள கையில பிடிக்க முடியாது இனி சொல்லவா வேணும்…?