புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கோலாகலமாக தொடங்கிய ஆஸ்கர் விழா 2024.. வெற்றியாளர்களின் மொத்த லிஸ்ட், அதிக விருதுகளை தட்டி தூக்கிய படம்

Oscars-2024: மிக உயர்ந்த மற்றும் பெருமைமிகு விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த 96 ஆவது விருது விழாவில் பல படங்கள் பல பிரிவுகளின் கீழ் போட்டியிட்டது. அதில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

அதன்படி இந்த நிகழ்வினை நான்காவது முறையாக ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். மேலும் ஓபன்ஹெய்மர், புவர் திங்ஸ் ஆகிய இரண்டு படங்களுக்கு இடையே தான் கடுமையான போட்டி நடைபெற்றது. அந்த வகையில் எந்த படங்கள் எந்த பிரிவுகளின் கீழ் விருதை வென்றது என்பதை பற்றி இங்கு காண்போம்.

அதில் ஓபன் ஹெய்மர் சிறந்த படம் என்ற விருதை தட்டி தூக்கியது. மேலும் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் ஆகிய பிரிவுகளிலும் விருதை வென்றது.

Also read: தளபதி 68 டைட்டில் Boss இல்ல Puzzle-லும் இல்ல.. மொத்த சீக்ரெட்டையும் போட்டு உடைத்த அர்ச்சனா கல்பாத்தி

அதேபோல் சிறந்த நடிகைக்கான விருதை புவர் திங்ஸ் படத்தில் நடித்ததற்காக எம்மா ஸ்டோன் பெற்றார். சிறந்த துணை நடிகை விருது தி ஹோல்டு ஓவர்ஸ் படத்திற்காக டாவின் ஜாய் ரேன்டோல்ப்-க்கு கிடைத்தது.

மேலும் சிறந்த சர்வதேச திரைப்பட விருது தி சோன் ஆப் இன்ட்ரஸ்ட் படத்திற்கு கிடைத்தது. அடுத்ததாக தி பாய் அண்ட் தி ஹெரான் சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை வென்றது. இதை அடுத்து அனாட்டமி ஆப் அ ஃபால் என்ற படம் சிறந்த திரைக்கதை பிரிவுக்கான விருதை பெற்றது.

அதைத்தொடர்ந்து புவர் திங்ஸ் படத்திற்கு சிறந்த தயாரிப்பு, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் ஆகிய பிரிவுகளுக்காக விருது கிடைத்தது. மேலும் சிறந்த தகவல் திரைக்கதைக்காக அமெரிக்கன் பிக்சன் படமும், பார்பி சிறந்த பாடலுக்கான விருதையும் பெற்றது.

சிறந்த இசைக்கான விருது தி ஜோனல் ஆப் இன்ட்ரஸ்ட் படத்திற்கு கிடைத்தது. அடுத்ததாக சிறந்த அனிமேஷன் குறும்படம் பிரிவின் கீழ் வார் இஸ் ஓவர் என்ற படம் விருதை தட்டி தூக்கியது. லைவ் ஆக்சன் குறும்படம் விருதை தி ஒன்டர்புல் ஸ்டோரி ஆப் ஹெர்னி சுகர், சிறந்த ஆவண படம் 20 டேஸ் இன் மேரிபல், சிறந்த ஆவண குறும்படம் விருதை தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப் வென்றது.

Also read: அட பப்ளிசிட்டி பைத்தியமே.. ஆடை இல்லாமல் வந்து ஆஸ்கார் மேடையை களங்கப்படுத்திய நடிகர்

Trending News