Minister Senthil Balaji: மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தான் இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பரபரப்பாக்கி இருக்கிறது. நேற்றைய தினம் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்பான அத்தனை இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. அதன் பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும் அதை தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதும் தற்போது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பின்னணியில் என்ன நடந்தது என்பதை இங்கு காண்போம்.
Also read: உதயநிதியை பகடை காயாய் பயன்படுத்தும் சிவகார்த்திகேயன்.. நரியை மிஞ்சிய தந்திரம்
சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை அமலாக்க துறையினரால் நடத்தப்பட்டு இருக்கிறது. அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த இவர் 81 பேருக்கு அரசு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்தது. இதுதான் இந்த சோதனைக்கும், விசாரணைக்கும் முக்கிய காரணம்.
பல வருடங்களாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தாலும் இடையில் போதிய ஆதாரம் இல்லை என்ற காரணத்தினால் முடித்து வைக்கப்பட்டது. ஆனாலும் இந்த வழக்கு அடுத்தடுத்த மேல் முறையீட்டுக்கு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் தான் இருந்தது. அதன்படி சட்ட விரோதமாக நடந்த பண பரிமாற்றம், முறைகேடு ஆகியவற்றின் அடிப்படையில் அமலாக்கத் துறையினரால் நேற்று இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
மேலும் ராணுவ படை பாதுகாப்புடன் நடத்தப்பட்ட இந்த சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் நள்ளிரவு 1.30 மணி அளவில் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதாவது அமலாக்கத் துறையினர் மனித நேயமற்று நடந்து கொண்டதாக கண்டனங்கள் எழுந்து வருகிறது. அதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார்.
Also read: ஆழமாக அரசியல் பேசும் மாமன்னன்.. கமலுடன் கூட்டணி போடுவாரா உதயநிதி!
மேலும் இதை சட்டப்படி சந்திப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். அது மட்டுமின்றி அவருக்கு நெஞ்சுவலி வரும் அளவுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.