திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

The Road Movie Review- பயமுறுத்தும் நெடுஞ்சாலை மாஃபியாக்கள்.. தி ரோடு பைபாஸா, ஸ்பீட் பிரேக்கரா.? முழு விமர்சனம்

The Road Movie Review: அருண் வசீகரன் இயக்கத்தில் திரிஷா, சந்தோஷ் பிரதாப், ஷபீர் கல்லராக்கல், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் தி ரோடு. நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்கள் பற்றிய விஷயங்களை பயமுறுத்தும் வகையில் சொல்லி இருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை இங்கு விரிவாக காண்போம்.

கதையின் நாயகியான திரிஷா தன் கணவர் சந்தோஷ் பிரதாப் மற்றும் மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ஆனால் ஒரு சாலை விபத்தில் அவர்களை பறிகொடுக்கிறார். அதில் அவருக்கு சந்தேகம் ஏற்படவே விபத்து நடந்த இடத்திற்கு செல்கிறார்.

Also read: லியோவுக்கு முன் 462 கிலோமீட்டரில் ரிவெஞ் எடுக்கும் திரிஷா.. வைரலாகும் “தி ரோடு” ட்ரெய்லர்

அங்கு இதற்கு முன்பாகவே பல மரண சம்பவங்கள் நடந்திருப்பதை கண்டறியும் திரிஷா இதற்கெல்லாம் மூல காரணமாக பெரும் மாஃபியா கும்பல் இருப்பதையும் துப்பறிகிறார். அதைத்தொடர்ந்து அவர் எடுக்கும் முயற்சிகளும் அது வெற்றியடைந்ததா என்பதும் தான் இப்படத்தின் கதை.

நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்கு பின்னால் இப்படி எல்லாம் காரணம் இருக்குமா என்கிற பாதைப்புடன் கதை நகர்கிறது. லீட் ரோலில் நடித்து இருக்கும் த்ரிஷா கதையின் தன்மையை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார். சுருக்கமாக சொல்லப்போனால் மொத்த படத்தையும் அவர் தன் தோள் மீது தாங்கியுள்ளார்.

Also read: இந்த வாரம் ரிலீசாக போகும் 6 படங்கள்.. விஜய் ஆண்டனி உடன் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் திரிஷா

அவருக்கு அடுத்தபடியாக வில்லனும் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார். ஆனாலும் அவருடைய ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இழுவையாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அதேபோல் போட்டு தள்ளும் கதாபாத்திரம் என்றாலே சந்தோஷ் பிரதாப் தான் ஞாபகத்திற்கு வருவார் போல.

பல படங்களில் பார்த்ததைப் போல இதிலும் அவர் மரணித்து விடுகிறார். இப்படியாக நகரும் கதையில் முதல் பாகம் வேக தடையாக இருக்கிறது. ஆனால் இரண்டாம் பகுதி பரபரப்புடன் நகர்கிறது. இருந்தாலும் நன்றாக சென்று கொண்டிருக்கும் பைபாஸ் சாலையில் திடீரென ஸ்பீட் பிரேக்கர் வந்தால் எப்படி இருக்கும். அதுபோல் படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் தவிர்த்து விட்டு த்ரிஷாவுக்காக ஒரு முறை படத்தை பார்க்கலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5

Trending News