2011 உலகக் கோப்பையை இந்திய அணி அசால்டாக வெற்றி பெற்று, அந்த கோப்பையை சச்சினுக்காக அர்ப்பணிப்பது. இந்த போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 274ரன்களை, 49 ஓவரில் இந்திய அணி சேஸ் செய்து கோப்பையை வென்றது. இந்த தொடரில் “மேன் ஆப் தி சீரியஸ்” படத்தை யுவராஜ் சிங் வென்றார்.
இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் விக்கெட்டை அடுத்தடுத்த இழந்து இந்திய அணி தடுமாறியது. அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த கௌதம் கம்பீருக்கு செய்தி அனுப்பியுள்ளார்.
இந்தப் போட்டியை விட வேண்டாம், பத்து ஓவர்களை தாண்டி விட்டால் ஆட்டம் நமது கையில் வந்து விடும். அதனால் உங்கள் ஆக்ரோஷத்தை கொஞ்சம் குறைத்துக் கொண்டு வெற்றியை அடையுங்கள் என்ற குறுஞ்செய்தியை மைதானத்திற்குகள் தண்ணீர் கொண்டு வந்தவரிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார் கேரி கிறிஸ்டன்.
அந்த அறியுறைகளை கேட்டாரோ, இல்லையோ கௌதம் கம்பீர் அந்த போட்டியில் 97 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
அந்தத் தொடரில் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க வீரர் கேரி கிறிஸ்டின் செயல்பட்டார் .
அந்த தொடர் முடிவடைந்ததும், பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், கம்பீரை ‘தி ராக்’ என்று அழைத்ததாக அணியில் மனநல பயிற்சியாளராகப் பணியாற்றிய பாடி அப்டன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கௌதம் கம்பீர் சிறிது கோபக்காரர் எப்பொழுதும் சிறு விசயங்களுக்கு கோபத்தின் உச்சிக்கே சென்று விடுவார். அதனால் அந்தப் பெயர், அவருக்கு பொருத்தமாக இருந்ததாகவும் நகைச்சுவையாக கூறினார்.
அணியில் கௌதம் கம்பீரின் பெயர் ராக் என்றும் தற்பொழுது தெரிய வந்துள்ளது. ஏனெனில் அவர் அந்த இந்திய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக இருந்தார். இதே போல் தான் ராகுல் டிராவிட்க்கும் டெஸ்ட் போட்டிகளில் பெயர் “தி வால்” என்பது குறிப்பிடத்தக்கது.