வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்க்கு முன்னரே மக்கள் பணி செய்த சாக்லேட் பாய்.. அரசியல் சாயம் பூசாத G.O.A.T பட நடிகர்!

G.O.A.T film actor who worked for people before Actor Vijay: இந்திய ஜனநாயகத்தில் வாரிசு அரசியல் ஒரு பக்கம் களை கட்டி இருக்க, சினிமாவின் பப்ளிசிட்டியை வைத்து அதன் மூலம் அரசியலில் நுழைந்து புகழை சம்பாதித்து வருகின்றனர் நடிகர் நடிகைகள். எழுதப்படாத விதியாக அரை நூற்றாண்டுக்கும் மேல் அரங்கேறி வருகிறது இந்த கலாச்சாரம்.

தமிழக அரசியலை எடுத்துக் கொண்டால் தமிழ் சினிமாவில் கோலோச்சி மக்களின் மனதை வென்றவர்களே அரசியலிலும் வென்று தமிழகத்தை ஆட்சி செய்தனர். இந்த பார்முலாவை வளர்ந்த, வளர்ந்து வரும் என அனைத்து தரப்பு நடிகர்களும் பின்பற்றி அரசியலுக்குள் நுழைவதையே தமது இலக்காகக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் இளைய தளபதி விஜய் அவர்கள் தனது அரசியல் அறிவிப்பை அறிவிக்கும் முன்னமே பற்பல சமூக சேவைகளை செய்து, “நான் ஒரு மக்கள் சேவகன்” என்ற பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். 

Also read: அரசியல் எதிரியை தேர்ந்தெடுத்த தளபதி.. எதிராக கிளம்பிய விஜய் இணைய கூலிப்படைகள்

இவை எதையுமே செய்யாமல், தன்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார் விஜய் உடன் G.O.A.T படத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர். ஜீன்ஸ், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள் போன்ற வெற்றி படங்களில் நடித்து 90ஸ் காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் தான் பிரசாந்த்

ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். இவர் நடித்த அந்தகன் திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் வெகு நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதன்பின் விஜய் உடன் G.O.A.T படத்தில் கம்பேக் கொடுத்த பிரசாந்த், வெள்ள பாதிப்புகளின் போதும், தமிழகத்தின் இக்கட்டான காலகட்டத்தின் போதும் நேரடியாக சென்று மக்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  

இவரது தந்தை தியாகராஜனும் பிரசாந்தும் கலைஞர் கருணாநிதி இடம் நெருங்கி பழகியவர்கள் ஆவார்கள். சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய்யை தொடர்ந்து நீங்கள் அரசியலுக்கு வருகிறீர்களா என்று பத்திரிக்கையாளரின் கேள்விக்கு, நண்பர் விஜய்யுடன் அரசியல் பத்தி பேசுவேன். அரசியல் ஆசை எல்லாம் கிடையாது. அரசியலுக்கு வர்றதுக்கு எனக்குத் தைரியம் இல்லை மக்களுக்கான உதவிகளை நான் எப்போதும் செய்வேன் என்று வெளிப்படையாகவே அறிவித்தார் இந்த ஆணழகன். 

Also read: தளபதியின் சட்டையை பிடித்து சண்டை போடும் பிரசாந்த்.. GOAT படத்தில் நடந்த மோதல் வீடியோ

Trending News