வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஷூட்டிங் ஸ்பாட்டையே அல்லோலப்படுத்தும் ஜி பி முத்து.. தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த அதிசயம்

டிக் டாக் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் நபர்களில் ஜிபி முத்துவும் ஒருவர். காதில் கேட்க முடியாத அளவிற்கு நாராசமாக பேசும் இவரின் நடவடிக்கையும், செயலும் மக்கள் பலருக்கும் வெறுப்பை கொடுத்து வருகிறது அதனால் சோஷியல் மீடியாவில் பலராலும் இவர் கலாய்க்கப்பட்டு வருகிறார்.

ஆனாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத ஜி பி முத்து என் வழி, தனி வழி என்ற ரேஞ்சுக்கு சோசியல் மீடியாவை ரணகளப்படுத்தி வருகிறார். தற்போது இவர் இரண்டு, மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் விஜய் டிவி புகழ் ரக்ஷன் மற்றும் சுனிதா உடன் இணைந்து ஒரு மியூசிக் ஆல்பத்தில் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து இவர் இப்போது சுசீந்திரன் இயக்கும் வள்ளிமயில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், பாரதிராஜா, விஜய் ஆண்டனி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர். அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் இவருடன் கலகலப்பாக பேசி வருகிறார்களாம்.

அவரை பார்ப்பதற்காகவே படப்பிடிப்பு தளத்தில் ஏகப்பட்ட மக்கள் கூட்டம் கரைபுரண்டு வருகிறதாம். அதுமட்டுமல்லாமல் அவருக்காக தனி கேரவன் கூட கொடுத்திருக்கிறார்களாம். இதைத்தான் தற்போது பலரும் அதிசயமாக பேசி வருகின்றனர்.

ஏனென்றால் தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக நடிகருக்கு இப்படி தனியாக கேரவன் கொடுப்பது கிடையாது. இன்று முன்னணியில் இருக்கும் பல நடிகர், நடிகைகளும் ஆரம்ப காலத்தில் தனி கேரவன் எல்லாம் பயன்படுத்தியது கிடையாது.

அப்படியிருக்கும்போது ஜி பி முத்துவுக்கு இப்படிப்பட்ட சலுகைகள் கிடைப்பது தமிழ்சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என்கின்றனர். மேலும் அவருக்கு கிடைத்த வாழ்வை பாரு என்று திரையுலகில் பலரும் அவரைப் பற்றி தான் அதிகமாக பேசி வருகிறார்களாம். இப்போது இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் இதற்கும் சேர்த்து ஜி பி முத்துவை கிண்டலடித்து வருகின்றனர்.

Trending News