கேப்ரில்லா தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருந்தாலும் இப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
அதன் மூலம் இவருக்கு ஈரமான ரோஜாவே எனும் சீரியல் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தற்போது அதில் ஒரு கதாநாயகியாக நடித்து வருகிறார். கேப்ரில்லா ஆரம்பத்தில் மிகவும் ஒல்லியாக இருந்துள்ளார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என அவரே பிக்பாஸ் மேடையில் தெரிவித்திருந்தார்.
![gabriella charlton](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/01/gabarilla.jpg)
மேலும் தனது உடல் எடையை கூட்டுவதற்காக உடற்பயிற்சி நிலையம் மற்றும் சில உணவுகளை உட் கொண்டதாகவும். அதனால் தனது உடல் எடை அதிகரித்து அதன் பிறகு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்திருந்தார். தற்போது இதுவே அவருக்கு எதிர்மறையாக அமைந்துள்ளது.
![gabriella charlton](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/01/cabrilla.jpg)
தற்போது கேப்ரில்லா அவரது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கேப்ரில்லா குண்டு தக்காளி போல் இருப்பதாகவும் மேலும் ஒரு சில ரசிகர்கள் அடுத்த சின்ன நமீதா எனவும் கூறி வருகின்றனர். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.