செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சங்கரிடம் சொல்லக்கூடாத வார்த்தையை சொல்லிய தயாரிப்பாளர்.. மொத்தமாய் அக்கட தேசத்தை வெறுத்த தில்ராஜ்

Game Changer producer said A word to director Shankar: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றதுமே முதலில் நம் ஞாபகத்திற்கு வருபவர் சங்கர் மட்டுமே. அந்த அளவு தான் இயக்கும் அனைத்து படத்திலும் ஒவ்வொரு காட்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து பிரம்மாண்ட செலவில் இயக்குவார்.

செலவில் சமரசம் செய்யாது அடிக்கடி தயாரிப்பாளர்களுடனும் மோதுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் இந்த இயக்குனர். தற்போது உலகநாயகன் கமலஹாசன் உடன் இந்தியன் 2 மற்றும் 3 படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

தற்போது இந்தியன் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுவென்று நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தை பிரம்மாண்ட செலவில் இயக்கி வருகிறார்.

பிரம்மாண்ட செலவில் உருவாகி வரும் ராம் சரணின் கேம் சேஞ்சர்

வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில்ராஜ் தயாரிப்பில் ராம்சரண் உடன் கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் பான் இந்தியா மூவியாக ரெடியாகி வருகிறது.

இந்த படத்தின் ஒரு பாடல் மற்றும் ஒரு ஆக்சன் காட்சிக்காக மட்டுமே 100 கோடி செலவு செய்துள்ளாராம் சங்கர். ஏற்கனவே தாறுமாறாக செலவு செய்பவரிடம் தயாரிப்பாளர் தில்ராஜ் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்ற வார்த்தையை கூறியுள்ளார்.

இந்த வார்த்தையை கேட்ட உற்சாகப் பெருக்குடன் இன்னும் 70 நாட்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில்  செலவு பற்றி கவலைப்படாமல் குதியாட்டம் போட்டு வருகிறாராம் சங்கர். 

அதுமட்டுமின்றி சங்கரை வைத்து இன்னும் இரண்டு மூன்று படங்கள் இயக்குவதற்கு கொக்கி போட்டு வருகிறாராம் தில்ராஜ். இருந்தாலும் தில்ராஜ்க்கு தில் அதிகம் தான்.

ஏற்கனவே வாரிசு படத்தை தயாரித்த தில்ராஜ் அதை தெலுங்கில் வெளியிடும் போது அங்கு இருப்பவர்களால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார். இதனால் தெலுங்கு சினிமாவையே வெறுத்து தமிழ் திரைப்படங்களை தயாரிக்கலாமா என்ற முடிவுக்கு ஆளானார். 

தெலுங்கில் உள்ள இவரது நல விரும்பிகள் மூலமாக ராம் சரணின் கேம் சேஞ்சர் தயாரிக்கும் வாய்ப்பு கிட்டியது. இவர் கொடுக்கும் தைரியத்தால் கேம் சேஞ்சர் வேற லெவல்ல ரெடியாகி வருகிறது.

இவர் போற போக்க பார்த்தா தெலுங்கு திரை உலகை மட்டுமல்லாது இந்திய சினிமாவையே ஒரு கை பார்த்து விடுவார் போல இந்த தில்ராஜ்.

பல சிறப்பம்சங்களுடன் சினிமாவின் கேமையே மாற்ற வருகிறது இந்த கேம் சேஞ்சர். 

Trending News