சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

வேற வழி இல்ல மாறா.. விட்டு கொடுத்து தான் ஆகணும்.. டைட்டில் பஞ்சாயத்தால் தலையை பிய்த்துக்கொள்ளும் இயக்குனர் ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் ‘கேம் சேஞ்சர்’. இப்படம் கடந்த 2021ம் வருடம் செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பமானது. கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு மிக மெதுவாக நடந்து வருகிறது.

இப்படத்தின் தலைப்பை கடந்த வருடம் மார்ச் மாதமே அறிவித்தார்கள். அதனால், கடந்த ஆண்டே இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் பட வெளியீடு எப்போது என்பது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்தியன் 2 போல இதுவும் இழுபறியாகுமோ என்ற சந்தேகமும் உள்ளது. மேலும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க, ஒரு வார்த்தைக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் செலவு செய்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். அதை கப் என்று பிடித்துக்கொண்ட ஷங்கர், காசை அல்லி இறைத்துக்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது..

டைட்டிலால் வந்த தலை வலி

கேம் changer டைட்டில் தான் வேணும் என்று பிடிவாதமாக வைத்துள்ளார் ஷங்கர். ஆனால் ஏற்கனவே, இந்த டைட்டில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது. ஆம் ஒரு தயாரிப்பு நிறுவனம் தான் இந்த டைட்டிலை வைத்த்துள்ளது.

இது கிடைக்குமா கிடைக்காத என்று பெரும் பிரச்சனையில் பல நாட்களாக ஷங்கர் இருந்துள்ளார். இந்த நிலையில், தற்போது தான் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அந்த டைட்டி லை சுமுகமாக வாங்கியுள்ளனர். தற்போது கேம் செஞ்சர் என்ற பெயரிலேயே படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News