திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

ராகினி கொட்டத்தை அடக்கப் போகும் கங்கா காவேரி.. விஜய் எடுக்கப் போகும் முடிவு

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி குமரனை கூட்டிட்டு கொடைக்கானலில் இருக்கும் வீட்டிற்கு வருகிறார். அங்கே கங்கா மற்றும் விஜய் இருப்பதை பார்த்துட்டு வழக்கம்போல் காவேரி கோவப்பட்டு திட்டிவிட்டுப் போய் விடுகிறார். இதனால் கங்காவை சமாதானப்படுத்துவதற்காக பின்னாடியே குமரன் ஓடுகிறார்.

இன்னொரு பக்கம் அக்கா இப்படி திட்டிட்டு கோவப்பட்டு போகிறாரே என்று கங்கா வீட்டிற்குள் உட்கார்ந்து அழுகிறார். இதனைப் பார்த்து விஜய்யும் கண்கலங்கி போய் நிற்கிறார். அடுத்ததாக இதற்கு மேலேயும் உண்மையா மறைத்தால் அக்கா தங்கச்சி பாசம் இல்லாமலே போய்விடும் என்று குமரன் உண்மையை சொல்லிவிட்டார்.

ஒன்னு சேர்ந்த கங்கா காவேரி

அதாவது காவேரியை கங்கா ரொம்பவே அசிங்கப்படுத்தி குமரனிடம் பேசுகிறார். பசுபதி கொடுத்த பணத்தை வைத்து நம்பி தான் நாம் சென்னையில் இருப்பதாக முடிவு பண்ணி வந்தோம். ஆனால் அந்த பணத்தை எல்லாம் என்ன பண்ணினார் என்று தெரியாமல் அவ இஷ்டத்துக்கு விஜய்யை கல்யாணம் பண்ணி குடும்பத்தை நிற்கதியாக தவிக்க விட்டுப் போயிட்டாள்.

அப்படி இருக்கும் போது அவளுக்கு நீங்க ஏன் சப்போர்ட் பண்ணுகிறீர்கள் என்று கங்கா குமரனிடம் கேட்கிறார். அதற்கு குமரன் நான் தான் பசுபதி கொடுத்த பணத்தை தொலைத்தேன். ஆனால் இந்த விஷயம் உங்களுக்கு தெரிந்தால் நாம் சந்தோஷமாக இருக்க மாட்டோம் என்று அத்தனை பழியையும் காவேரி மீது போட்டுக்கிட்டாள். அவள் மீது எந்த தவறும் இல்லை என்று குமரன் சொல்லுகிறார்.

இதை கேட்டதும் கங்கா, காவிரியை தேடி போய் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பண்ணுன தப்புக்கும் பேச்சுக்கும் மொத்தமாக சேர்த்து மன்னிப்பு கேட்டு விட்டார். அப்படின்னு அக்கா தங்கச்சி பாசத்தை பார்ப்பதற்கு ரொம்பவே இதமாக இருந்தது என்று சொல்வதற்கு ஏற்ப இரண்டு பேருடைய பாசம் நெகிழ வைத்துவிட்டது.

இனி கங்கா மற்றும் காவிரியின் ஆட்டம் ராகினிக்கு சரியான பதிலடியாக இருக்கும். பசுபதி கொட்டத்தை அடக்கும் வகையில் விஜய் ராகினி மற்றும் அஜய்யை தனியாக வைப்பதற்கு முடிவெடுக்க போகிறார்.

மகாநதி சீரியலின் முந்தைய எபிசோடுகள்

- Advertisement -

Trending News