ஏதாவது சர்ச்சை கருத்துக்களை அவ்வப்போது கூறிவரும் கங்கை அமரன், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை பற்றி கருத்துக் கூறியது சர்ச்சையாகி உள்ளது. இசைஞானி இளையராஜாவின் அண்ணனான கங்கை அமரன் பல திரைப்படங்களை இயக்கியும் இசையமைத்தும் உள்ளார்.
இதனிடையே தற்போது தனது மகனான இயக்குனர் வெங்கட் பிரபு, விஜய் மற்றும் அஜித் கூட்டணியில் கூடிய விரைவில் படத்தை இயக்க கதை எழுதி வைத்துள்ளதாக கங்கை அமரன் கூறினார். இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டினாலும், அதிகாரபூர்வமான அறிவிப்பு இல்லை என்பதால் சர்ச்சையானது.
இதனையடுத்து சமீபத்தில் சீனு ராமசாமியை இளையராஜா அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொண்டதையடுத்து அதற்கும் கங்கை அமரன் தனது அண்ணனிடம் விளக்கம் கொடுக்க வைப்பேன் என கூறி அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார்.
இப்படி பல சர்ச்சை கருத்துக்களை கூறிவரும் கங்கை அமரன் அரசியலிலும் இருந்து வருகிறார். இதனிடையே கமல், அஜித், சூர்யா, விஜய் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து அரசியல் கட்சியை உருவாக்கினால் நன்றாக இருக்கும் என்று கங்கை அமரன் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.
ஏற்கனவே விஜய் தலைமையில் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் கமலஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சியை தொடங்கி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அஜித் மற்றும் சூர்யாவையும் இணைத்து கட்சி தொடங்குமாறு கூறியது அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இளையராஜாவிற்கு சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பிஜேபி வழங்கியதையடுத்து பல வருடங்களாக கட்சியில் இருக்கும் கங்கை அமரனுக்கு இப்பதவி கொடுக்கப்படவில்லை என்பதால் பிஜேபி கட்சியில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக கூட அரசியலில் நடிகர்களை இணைக்கும் வகையில் கங்கை அமரன் பேசி வருகிறார் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர்.