வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

Dinosaurs Movie Review- வடசென்னை கேங்ஸ்டர்ஸ், மிரட்டும் புது முகங்கள்.. டைனோசர்ஸ் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் விமர்சனம்

Dinosaurs Movie Review: புது முகங்களை வைத்து வெளிவந்த தரமான படம் என்ற பாராட்டை பெற்று வருகிறது எம் ஆர் மாதவன் இயக்கத்தில் வெளிவந்த டைனோசர்ஸ். உதய் கார்த்திக், ரிஷி, மாறா என பலர் நடித்து இருக்கும் இப்படம் வட சென்னையின் கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கிறது.

வழக்கமான ரவுடி கதையில் இருப்பது போல பழிவாங்கும் படலமாக தான் இப்படம் இருக்கிறது. ஆனால் இயக்குனர் படத்தை கொடுத்திருக்கும் விதம் பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில் அண்ணன் தம்பிகளாக இருக்கும் உதய் கார்த்திக், ரிஷி இருவருக்கும் மாறா நண்பராக இருக்கிறார்.

Also read: தங்கலானுக்கே டஃப் கொடுத்த அட்டகத்தி தினேஷ் கெட்டப்.. பா ரஞ்சித் மிரட்டி விடப் போகும் வித்தியாசமான புகைப்படம்

வில்லனிடம் அடியாளாக இருக்கும் மாறா தன் மனைவியால் திருந்தி வாழ வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அப்போது இவர் செய்த பழைய தவறு ஒன்று இவருக்கு எதிராக வந்து நிற்கிறது. அதை தொடர்ந்து சில சதிகளால் இவரின் மரணமும் நடக்கிறது. இந்த மரணத்திற்கு பழிவாங்க வரும் ஹீரோ அதில் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பது தான் இப்படத்தின் முழு கதை.

ஆரம்பத்தில் படத்தின் போக்கு கொஞ்சம் தொய்வாக இருந்தாலும் போகப்போக அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி விடுகிறது. அதிலும் இடைவேளை காட்சி படம் பார்ப்பவர்களை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது. அதை தொடர்ந்து இரண்டாம் பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்கிறது.

Also read: விடாமுயற்சினு டைட்டில் வச்சது இதுக்கு தான் போல.. முழு வீச்சாக உலகம் சுற்றும் அஜித்

வடசென்னை பகுதி மக்களின் கதையை நாம் பல படங்களில் பார்த்திருப்போம். இதுவும் அது போன்ற கதை களம் தான் என்றாலும் கதாபாத்திரங்கள் அப்படியே எதார்த்தத்தை பிரதிபலிப்பது சிறப்பு. இதற்காகவே இயக்குனரை பாராட்டலாம். அதிலும் நச்சென்று இருக்கும் வசனங்கள் படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது.

இப்படி படத்தில் நாம் ரசிக்கும் விஷயங்கள் நிறைய இருந்தாலும் சம்பந்தமில்லாத சில காமெடி காட்சிகள் வேகத்தடையாக இருக்கிறது. ஆனாலும் புது முகங்களை வைத்து இப்படி ஒரு படத்தை கொடுத்து கவனத்தை ஈர்த்திருக்கிறார் இயக்குனர். மேலும் ட்ரெய்லரில் அதிக கவனம் பெறாமல் போன இப்படம் தற்போது ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. அந்த வகையில் இந்த டைனோசர்ஸ் லோக்கல் சென்னையின் எதார்த்த முகமாக இருக்கிறது.

சினிமாப்பேட்டை ரேட்டிங்: 3/5

Trending News