இந்திய அணியை கட்டமைத்தவர் சௌரவ் கங்குலி என்றே கூறலாம். ஒரு காலத்தில் இந்திய அணி நிறைவான வீரர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது கங்குலியின் வரவு இந்திய அணிக்கு ஒரு பெரிய அஸ்திவாரத்தை கொடுத்தது.
இடதுகை பேட்ஸ்மேனான இவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு என்று அணிக்குள் வந்தார் ஆனால் நிலைமை தலைகீழாக மாறியது. ஒருநாள் போட்டியில் அசத்தி, கேப்டனாக மாறி இந்திய அணிக்கு ஒரு மாபெரும் சக்தியை கொடுத்தார்.
மிகவும் ஆக்ரோஷமான கேப்டனான சவுரவ் கங்குலியின் வருகைக்கு பிறகு இந்திய அணி பல போட்டிகளில் ஆதிக்கம் தொடங்க ஆரம்பித்தது. வெளிநாட்டு மண்ணில் பல போட்டிகளை வென்று சாதனைபடைத்தது. தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று பிசிசிஐ தலைவர் பொறுப்பில் உள்ளார் சௌரவ் கங்குலி.
இந்நிலையில் பிரபல பிலிம்ஸ் நிறுவனம் ஒன்று கங்குலியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க போவதாக அறிவித்துள்ளது. முன்னதாக கங்குலி தன்னுடைய வாழ்க்கை வரலாறு படமாக தயாரானால் அதில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க வேண்டும் என்று தம் ஆசையை தெரிவித்துள்ளார்.
தற்போது LUV பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கப் போவதாகவும், அதில் ரன்பீர் கபூர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கங்குலியின் குஷியில் உள்ளனர்.