கிரிக்கெட் வீரர் தோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்டோரின் பயோபிக் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் காரணமாக தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பிரபல சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து 800 என்கின்ற படத்தை ஸ்ரீபதி என்கிற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியான போது, அதில் விஜய் சேதுபதி தான் முத்தையா முரளிதரன் ஆக நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இப்போது முத்தையா முரளிதரன் ஆக பாலிவுட் நடிகர் மதுர் மிட்டல் என்பவர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: விஜய் சேதுபதியை ஓரம் கட்டு வந்த 800 பட ஹீரோ.. முத்தையா முரளிதரனாக நடிக்கவிருக்கும் ஆஸ்கார் பட நடிகர்
முத்தையா முரளிதரன் மட்டுமல்ல கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க போகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிபிசிஐ-யின் முன்னாள் தலைவருமான கங்குலியின் பயோபிக் படத்தைக் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் கங்குலியாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க உள்ளாராம். மேலும் ரன்பீர் கபூர் தான் கங்குலியாக நடிப்பதற்கு பொருத்தமானவர் என ரசிகர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். விரைவில் கங்குலியின் பயோபிக்கின் டைட்டிலும் அதில் நடிக்கும் நடிகர்களை குறித்த முழு விவரமும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட போகிறது.
Also Read: விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து மிரண்டுபோன பிரபலம்.. பகையை மறந்து பாராட்டிய சம்பவம்
லவ் ரஞ்சன் இந்த படத்தை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கங்குலி எப்போதுமே ஆக்ரோஷமாக விளையாட கூடியவர்.
கிரவுண்டில் இவர் தனது சட்டையை கழட்டி சுழற்றும் சம்பவம் எல்லாம் இன்று வரை தரமான சம்பவமாக கிரிக்கெட் ரசிகர்களிடம் பேசப்படும். மேலும் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் பட்சத்தில் அவரைப் பற்றிய இன்னும் தெரியாத விஷயங்கள் அனைத்தும் தெரியவரும் என்பதால் கிரிக்கெட் பிரியர்கள் ரொம்பவே குஷி ஆகி விட்டனர்.
Also Read: 7 மாதத்தில் நிறைமாத குழந்தையைப் பெற்றெடுத்த ஆலியா பட்.. சந்தோஷத்தில் திளைக்கும் ரன்பீர் கபூர்