வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

தி கோட், வேட்டையன் பட சாதனையை தவிடுபொடி ஆக்கிய கங்குவா.. இனி சூர்யாவின் வசூல் வேட்டை ஆரம்பம்

கங்குவா படம் ரிலீஸுக்கு முன்னே தி கோட் மற்றும் வேட்டையன் படத்தின் வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கங்குவா. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து இப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி, யோகிபாபு, நட்டி ஆகியோர் நடித்துள்ளர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

3 டி தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பை இப்படம் தமிழ் சினிமாவில் மட்டும் அல்ல இந்திய சினிமாவிலேயே அதிக வசூல் குவிக்கும் படமாக அமையும் என இப்படக் குழுவினர் கூறி வருகின்றனர்.

ரூ.2000 கோடி வசூல் பற்றி சூர்யா கருத்து

தங்கலான் படம் ரூ.2 ஆயிரம் கோடி வசூலித்தது. பாகுபலி படம் ரூ.1800 கோடி வசூலித்தன. தமிழ் சினிமாவில் அதிகபட்சமாக ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படம் ரூ.800 கோடி வசூலித்தது. ஆனால், கங்குவா படம் ரூ.2000 கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார். இப்படத்தின் புரமோசன் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், ஐதராபாத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதுபற்றி சூர்யாவிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவர், ’’பெரிய கனவு கண்டால், அது குற்றமா? அந்தக் கனவு வெளிப்படுவதை நம்புகிறேன். இப்பிரஞ்சத்தை நம்புகிறேன். அது நடக்கட்டும் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்’’ என்று தெரிவித்தார். தமிழில் வெளியான படங்களில், ஆக்சன், காதல், செண்டிமெண்ட், தற்காலம், பழைய காலம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகியுள்ள சூர்யாவின் கங்குவா படத்திற்குத்தான் அதிகளவில் புரமோசன் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே வேட்டையன், தி கோட் பட சாதனையை முறியடித்துள்ளது.

வேட்டையன், தி கோட் பட சாதனையை முறியடித்த கங்குவா

அதன்படி, ரஜினியின் வேட்டையன் படத்தின் தெலுங்கு ரைட்ஸ் ரூ. 16 கோடிக்கும், தி கோட் படத்தின் தெலுங்கு ரைட்ஸ் ரூ.17 கோடிக்கும் விற்பனை ஆன நிலையில், சூர்யாவுக்கு தெலுங்கில் ரசிகர்கள் அதிகம், அதேசமயம் அவரது படங்களுக்கு அதிக வசூல் குவியும் என்பதால் எப்போதும் அவரது படங்களுக்கு அங்கு எதிர்பார்ப்பு அதிகம். அதனால், கங்குவா படத்தின் தெலுங்கு ரைட்ஸ் ரூ.25 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன், விஜய்யின் தி கோட் ஆகிய இரு முன்னணி நடிகர்களின் படங்களின் ரைட்ஸைவிட அதிக தொகைக்கு விற்கப்பட்ட படம் என்ற சாதனையை சூர்யாவின் கங்குவா படம் பெற்றுள்ளது. எனவே இப்படம் ரிலீஸுக்குப் பின் இன்னும் பல சாதனைகளை படைத்து தமிழில் அதிக வசூலித்த படம் என்ற சாதனை படைக்கும் என ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.

Trending News