புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கஞ்சாகருப்பு.. கோடிக்கணக்கில் கடன், வீட்டை விற்ற அவல நிலை!

தமிழ் சினிமாவில் நம்பகத்தன்மை வாய்ந்த காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் கஞ்சாகருப்பு. இவர் ‘பிதாமகன்’ என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து பல படங்களில் கஞ்சாகருப்பு நடித்திருந்தாலும், ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் தான் பட்டி தொட்டி எங்கும் பரவினார். மேலும் இவர் தனது சிறந்த நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டதோடு, பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு மேலும் பரிட்சயம் ஆனார்.

இந்த நிலையில் கஞ்சா கருப்பு சொந்த காசில் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அதாவது கடந்த 2014ஆம் ஆண்டு கஞ்சா கருப்பு ‘வேல்முருகன் போர்வெல்’ என்ற படத்தை  தயாரித்தாராம். அந்தப் படம் அட்டர் ப்ளாப் ஆகி கஞ்சா கருப்பை நடுத்தெருவில் நிறுத்திவிட்டதாம்.

ஆனால் அப்போதே பாலா மற்றும் அமீர் தயாரிப்பு வேண்டாமென்று சொன்னதோடு, கஞ்சா கருப்பை நடிப்பை மட்டும் பார்க்க சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும் அதை கஞ்சாகருப்பு காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லையாம். அதைக் கேட்காமல் கோபி என்ற டைரக்டரை நம்பி ஏமாந்து விட்டதாக கஞ்சா கருப்பு பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அந்தப் படத்தால் அவருக்கு 4 கோடி ரூபாய் தனக்கு  நஷ்டம் ஆகி விட்டது என்றும், இதனால் தனது சொந்த வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், இனிமேல் சொந்தமாக படம் எடுக்க வாய்ப்பே இல்லை என்றும் ஆவேசமாக கூறியிருக்கிறார் கஞ்சாகருப்பு.

எனவே, இவ்வாறு சொந்தக் காசில் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்ட கஞ்சாகருப்பு பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி, பல அறிமுக தயாரிப்பாளர்களை எச்சரிக்கும் விதமாக உள்ளது.

Trending News