தமிழ் சினிமாவில் என்றென்றும் கொண்டாடக் கூடிய காமெடி நடிகர்களில் முக்கியமானவர் கவுண்டமணி. தன்னுடைய நக்கல், நையாண்டி மூலம் சுவாரஸ்யமான காமெடி காட்சிகளில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர்.
அதுமட்டுமில்லாமல் அவர் நடித்த காலகட்டங்களில் ஹீரோவை விட அதிகமாக சொகுசாக வாழ்ந்தவர் எனவும் ஒரு வரலாறு உண்டு. தயாரிப்பாளர்கள் கவுண்டமணியை மட்டும் தனியாக கவனிப்பார்களாம்.
அதுமட்டுமில்லாமல் கவுண்டமணி, செந்தில் கூட்டணி இல்லாமல் தனியாகவே ஒரு படத்தை தாங்கும் அளவுக்கு வல்லமை கொண்டவர். தனி ஒரு காமெடியனாக கலக்குவதிலும் அவருக்கு நிகர் அவர்தான். ஆனால் செந்திலிடம் அது மிஸ்ஸிங்.
ஒரு மொழியில் பிரபலம் ஆகிவிட்டாலே அவர்களுக்கு பல மொழிகளிலிருந்து பட வாய்ப்பு வரும் என்பது தெரிந்த ஒன்றுதான். இன்று இருக்கும் பல நடிகர்களும் தங்களுடைய படங்கள் மற்ற மொழிகளிலும் ஓடவேண்டும், பெரிய அளவு வசூல் செய்ய வேண்டும் என விரும்புகின்றனர்.
ஆனால் கவுண்டமணி நடித்தால் தமிழ் சினிமாவில் மட்டும்தான் நடிப்பேன் என அடம் பிடித்தாராம். கவுண்டமணி உச்சத்தில் இருந்த காலகட்டங்களில் அவரை தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க வைக்க கோடிகளில் பணத்தை கொட்டிக் கொடுக்க தயாரிப்பாளர்கள் ரெடியாக இருந்தார்களாம்.

ஆனால் எனக்கு பாஷை தெரியாத மொழியில் நடிக்க விருப்பமில்லை என ஓபன் ஆக சொல்லிவிட்டாராம் கவுண்டமணி. எவ்வளவு கோடி கொடுத்தாலும் இதுதான் என்னுடைய பதில் என்று கூறி அந்தத் தயாரிப்பாளர்களை திருப்பி அனுப்பி விட்டதாகவும் செய்திகள் உள்ளன.