ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

அந்த மனுஷனுக்கு ஆரம்பத்தில் இருந்தே அவர் மீது கடுப்பு தான்.. தோனியை விளாசிய வீரர்

ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஐ.சி.சி யினால் ஒரு நாள் அந்தஸ்தைப் பெற்றுள்ள அணிகளை வைத்து நடத்தக்கூடிய போட்டி தான் உலகக் கோப்பை போட்டி. கிட்டத்தட்ட 8 முதல் 10 அணிகள் பங்குபெறும் இப்போட்டிகளில், இறுதிப் போட்டியை வெல்லும் அணியே உலக சாம்பியன்.

கடந்த முறை 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. நியூசிலாந்து அணி அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி இது வரை 2 முறை ICC நடத்தும் உலகக் கோப்பையை வென்றுள்ளது. 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் ஒரு முறையும், 2011ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் ஒருமுறையும் கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி கோப்பையை வென்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதில் 2011ஆம் ஆண்டு தோனி தலைமையில் உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்தவர், டெல்லியைச் சேர்ந்த கௌதம் காம்பீர். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து காம்பீர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல தோனி கடைசியில் அடித்த ஒரு சிக்ஸர் காரணமாக அமைந்திருந்தது என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது, அதற்கு அப்பமே எதிர்ப்பு தெரிவித்திருந்தார் கௌதம் காம்பீர்.

கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு, தோல்வியடைந்தாலும் வெற்றி பெற்றாலும் அது அந்த குழுவையே சாரும். 2011 உலக கோப்பை இறுதிப் போட்டியில் கௌதம் காம்பீர் 97 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்து 91 ரன்களை எடுத்து மகேந்திர சிங் தோனியும் இந்தியாவின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். மேலும் அந்தத் தொடர் முழுவதும் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Dhoni-Cinemapettai.jpg
Dhoni-Cinemapettai.jpg

ஆகையால் தோனியை மட்டுமே வெற்றிக்கு காரணம் என்று கூறுவது தவறு எனவும். 2011 உலக கோப்பையை வெல்ல அணியின் முழு பங்களிப்பே காரணம் என இப்பொழுது கௌதம் காம்பீர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Gautham-Cinemapettai.jpg
Gautham-Cinemapettai.jpg
- Advertisement -spot_img

Trending News