சனிக்கிழமை, பிப்ரவரி 1, 2025

குணசேகரனை தூக்க போகும் கௌதம்.. கதிருக்கு கெடு வைத்த ஜீவானந்தம் எதிர்பாராத ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது திருவிழாவை கொண்டாடுவதற்கு கோலாகலமாக அனைவரும் தயாராகி விட்டார்கள். ஆனால் இதில் அப்பத்தா அவருடைய 40% சொத்துக்கு முடிவு கட்டும் விதமாக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணி இருக்கிறார். இதை தலைமை தாங்கும் பொறுப்பில் ஜீவானந்தம் வருகிறார் என்று கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில் திருவிழாவில் வைத்து ஜீவானந்தத்தின் கதையை முடிக்க வேண்டும் என்று கதிர், வளவன் முடிவெடுத்திருக்கிறார்கள். அத்துடன் அப்பத்தாவுடைய கதையும் க்ளோஸ் பண்ணி விட வேண்டும் என்று கதிர் மிகப்பெரிய திட்டத்துடன் இருக்கிறார். இதற்கிடையில் அப்பத்தா வீட்டில் இருக்கும் அனைவரது முன்னாடியும் நந்தினி மற்றும் ரேணுகாவிற்கு கிடைக்க வேண்டிய மரியாதையை வாங்கிக் கொடுக்கிறார்.

இதெல்லாம் பார்த்து ரொம்பவே அமைதியாக இருக்கும் கதிர் மனதிற்குள் நீ என்ன நாளும் பண்ணு. உன்னுடைய ஆட்டம் இதோட க்ளோஸ் ஆகிவிடும் எல்லாத்திற்கும் நான் முடிவு கட்டுகிறேன் என்ற நினைப்பில் அமைதியாக இருக்கிறார். அதே மாதிரி ஜீவானந்தத்திற்கு தன்னுடைய மனைவி இறப்பிற்கு காரணம் குணசேகரன் மற்றும் கதிர் தான் என்ற உண்மை தெரிந்து விட்டது.

அதற்காக தன் மனைவி இறப்பிற்கு காரணமான கதிரையும் குணசேகரனையும் சும்மா விடக்கூடாது என்ற முடிவுடன் இருக்கிறார். அதனால் திருவிழாவிற்கு வரும் கதிருக்கு கண்டிப்பாக ஜீவானந்தத்தின் மூலம் ஏதோ ஒரு ஆபத்து இருப்பது போல் தெரிகிறது. அத்துடன் கௌதமுக்கும் எல்லா உண்மையும் தெரிந்ததால் குணசேகரனை தூக்க வேண்டும் என்ற நினைப்புடன் திருவிழாவிற்கு அவரும் வருகிறார்.

ஆக மொத்தத்தில் திருவிழாவில் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் நடக்கப் போகிறது. ஒருவேளை குணசேகரன் கதாபாத்திரத்தை இதோட நிறுத்திக் கொள்ளலாம் என்று அவருடைய உயிருக்கோ அல்லது நிரந்தரமாக ஜெயிலுக்கு போக வேண்டிய சூழ்நிலை கூட வர வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் கதிர் உடைய ஆட்டமும் இதோட குறைவதற்கு பல வேலைகள் நடக்கப்போகிறது.

இதன் மூலம் தான் அந்த வீட்டில் உள்ள மருமகளுக்கு விடிவு காலம் பிறந்து அவர்கள் ஒவ்வொருவரும் சொந்த காலில் சுயமாக ஜெயிக்கப் போகிறார்கள். ஆனாலும் ஜனனிக்கு மட்டும் புதிதாக வந்த வில்லன் மூலம் தொடர்ந்து பிரச்சினை வரப்போகிறது. அதன் மூலம் அந்த குடும்பம் யார் என்று பார்க்கும் போது தான் ஜனனிக்கு எல்லா உண்மையும் தெரியப்போகிறது. இப்படி பல திருப்பங்களை கொண்டு வந்து எதிர்நீச்சல் சீரியலை விறுவிறுப்பாக நகர்த்தி வருகிறார்கள்.

Trending News