ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

போயும் போயும் அந்த இயக்குனர் படத்தில் வில்லனா? கௌதம் மேனனை கலாய்க்கும் ரசிகர்கள்

சமீபகாலமாக கௌதம் மேனன் இயக்குனர் என்பதை விட நடிகராக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். மேலும் சில படங்களில் வில்லனாக நடிக்க தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகிறார்.

ஒரு காலத்தில் நல்ல இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த கௌதம் மேனனின் சமீபத்திய படங்கள் எதுவுமே ரசிகர்களை கவரவில்லை. இதனால் இயக்கத்திற்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

தொடர்ந்த மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வில்லன் வேடங்களில் கலக்கி வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக திரௌபதி பட கூட்டணியில் உருவாகும் ருத்ர தாண்டவம் படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்ததில் இருந்து கவுதம் மேனனுக்கு ரசிகர்கள் வாழ்த்து சொல்வதற்கு பதிலாக இந்த படத்தில் ஏன் நடிக்கிறீர்கள்? எனும் அளவுக்கு கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

gautham-menon-rudra-thaandavam
gautham-menon-rudra-thaandavam

திரௌபதி படமே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்கி எடுத்ததாலேயே அந்த படம் ஓடியதாக தற்போது வரை கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் உள்ளது. அதை தவிர்த்து வேறு எந்த சிறப்பான விஷயமும் படத்தில் இல்லை எனவும் கூறுகின்றனர்.

இந்நிலையில் சமீபகாலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் கவுதம் மேனன் எதற்காக ருத்ர தாண்டவம் படத்தில் வில்லனாக ஒத்துக் கொண்டார் என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராக உள்ளதாம்.

Trending News