ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

துருவ நட்சத்திரம் படத்திற்கு கௌதம் மேனனின் சாய்ஸ்.. விக்ரமுக்கு முன்பு லிஸ்டில் இருந்த 2 ஹீரோக்கள்

Dhruv Natchathiram: கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் பல வருடத்திற்கு முன்பே உருவான படம் தான் துருவ நட்சத்திரம். சில காரணங்களினால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த சூழலில் இப்போது மீண்டும் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். இதற்கான வேலையில் கௌதம் மேனன் இப்போது இறங்கி இருக்கிறார்.

இந்த சூழலில் துருவ நட்சத்திரம் படத்தை பற்றிய பல சுவாரசியமான தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் கூறியிருந்தார். அப்போது விக்ரமுக்கு முன்னதாகவே இரண்டு ஹீரோக்களிடம் துருவ நட்சத்திரம் படத்தின் கதை சென்றிருக்கிறது. அப்போது முதலாவதாக கௌதம் மேனன் நாடிய நடிகர் தான் சூர்யா.

ஏற்கனவே கௌதம் மேனன் மற்றும் சூர்யா வெற்றி கூட்டணியாக இருந்து வரும் நிலையில் மீண்டும் இணைய முடிவெடுத்திருந்தனர். ஆனால் இந்த கதை எந்த ஜானர் என்பதை சூர்யா புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பதும் அவருக்கு சந்தேகம் இருந்ததால் வேறு படத்தில் நாம் இணையலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

Also Read : தனுஷ், விக்ரம் படத்த தியேட்டர்ல வர விடல.. தயாரிப்பாளரின் முகத்திரையை கிழித்த பிரபல இயக்குனர்

அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தான் கௌதம் என தேர்ந்தெடுத்திருக்கிறார். மேலும் அவரது வயதை கருத்தில் கொண்டு கதையில் சில மாற்றங்கள் செய்து கௌதம் எனில் எடுத்து சென்று இருக்கிறார். ரஜினிக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்த நிலையில் சில காரணங்களினால் துருவ நட்சத்திரம் பண்ண முடியாமல் போய்விட்டது.

அப்போது ரஜினி கபாலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு தான் இந்த கதை விக்ரமிடம் எடுத்துச் செல்லும்போது அவர் தான் பண்ணுகிறேன் என்று கமிட்டானார். ஆனால் துரதிஷ்டவசமாக சில வருடங்களால் ரிலீஸ் தள்ளி போனாலும் புது பொலிவுடன் விரைவில் துருவ நட்சத்திரம் ரசிகர்களை சென்றடைய இருக்கிறது.

Also Read : ரஜினி, அஜித்துக்கு கொக்கி போடும் விஜய் தம்பி.. பாட்ஷாவை தூக்கி சாப்பிட தயாராகும் ஸ்கிரிப்ட்

Trending News