வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

கௌதம் மேனன் வீட்டை தேடி வந்த பணத்தை கொட்டிய தயாரிப்பாளர்.. துருவ நட்சத்திரத்திற்கு வந்த விடிவுகாலம்

கௌதம் வாசுதேவ் மேனன் ஆரம்பத்தில் இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் இப்போது அவர் நடிகராக படங்களில் நடிக்க காரணம் கடன் பிரச்சனை தான். பல வருடங்களுக்கு முன்பு கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் மற்றும் ராதிகா சரத்குமார் நடிப்பில் துருவ நட்சத்திரம் உருவானது.

இந்த படத்தை கௌதம் மேனன் உடன் இணைந்து சில தயாரிப்பாளர்கள் தயாரித்தனர். ஆரம்பத்தில் 60 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் கௌதம் மேனன். ஆனால் படத்தின் பட்ஜெட் 100 கோடியை தாண்டி போய்விட்டது. ஆகையால் கௌதம் மேனனுக்கு பணம் நெருக்கடியும் ஏற்பட்டது.

Also Read : கௌதம் மேனன் போல் பார்த்திபனையும் வச்சி செய்த பிரதீப்.. பதிலடி கொடுத்த நக்கல் மன்னன்

இதனால் தற்போது வரை துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வந்தார். ஆனால் கௌதம் மேனனை தேடி வந்த பணத்தைக் கொட்டி உள்ளார் தயாரிப்பாளர் லலித் குமார். அதாவது துருவ நட்சத்திரம் படத்தை லலித் பார்த்துள்ளார். பொதுவாக ஒரு படங்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் வெளியிட்டால்தான் சரியான வசூலை பெற முடியும்.

சில சமயங்களில் இது போன்ற சிக்கலில் இருக்கும் படங்கள் நீண்ட வருடங்களுக்கு வெளியானால் எதிர்பார்ப்பு குறைந்து வசூல் பாதிக்கும். ஆனால் துருவ நட்சத்திரம் படம் புதுமை மாறாமல் அப்படியே இருக்கிறதாம். கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் லலித் இப்படத்தை வாங்கி உள்ளார்.

Also Read : சிம்பு, கௌதம் மேனன் இடையே பிரச்சனைக்கு இதுதான் காரணம்.. VTV2-க்கு வாய்ப்பு இருக்கா?

மேலும் இப்படத்திற்கான புதிய ட்ரெய்லரை வெளியிடும் பணியில் துருவ நட்சத்திரம் படக்குழு இறங்கி உள்ளது. அதுமட்டுமின்றி ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. நீண்ட நாட்களாக கிடப்பில் போட்ட துருவ நட்சத்திரம் படத்திற்கு லலித் மூலமாக விடிவு காலம் கிடைத்துள்ளது.

இயக்குனர் கௌதம் மேனனும் லலித் கொடுக்கும் பணத்தின் மூலம் தனது கடனை முழுமையாக அடைக்க உள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தை வெளியிட முடியாமல் பண பிரச்சனையில் சிக்கி இருந்தனர். அப்போதும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தான் படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : இயக்குனர் என்பதை மறந்து நடிப்பில் இறங்கிய 5 பிரபலங்கள்.. வில்லனாய் மாறிய கௌதம் மேனன்

Trending News