Gautham Menon: கௌதம் மேனன் ஒரு காலத்தில் இளைஞர்களின் இஷ்டமான இயக்குனர் என்ற இடத்தை தக்க வைத்திருந்தார். மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி காதல் மற்றும் ஆக்சன் படங்களை வித்தியாசமான முறையில் கொடுத்து அனைவரது கவனத்தையும் பெற்றார். ஆனால் எடுத்த பெயர் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் பெயிலியர் இயக்குனர் என்ற பெயரை எடுத்து விட்டார்.
இதை எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என்று ஜோஸ்வா படத்தையும் ஆக்சன் திரில்லர் படமாக இயக்கினார். ஆனால் அந்த படமும் தோல்வில் தான் முடிந்தது. எடுத்து வைத்த மொத்த பெயரும் கெடுக்கும் விதமாக இப்படம் பெரிய அடிவாங்கி விட்டது. அது மட்டுமில்லாமல் இது கௌதம் மேனன் இயக்கிய படமா என்று மக்கள் அதிர்ச்சியாகும் அளவிற்கு இருந்தது.
இதனால் தற்போது ரொம்பவே மன உளைச்சலில் தவித்து வருகிறார். இந்த ஒரு கெட்ட பெயரால் துருவ நட்சத்திரம் படத்திற்கும் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. விக்ரமை வைத்து பல வருடங்களுக்கு முன் இயக்கப்பட்ட இப்படம் பண நெருக்கடியால் ரிலீஸ் பண்ண முடியாமல் மொத்த டீமும் தவிப்பில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் கௌதம் மேனனின் இமேஜ் டேமேஜ் ஆகி உள்ளதால் இப்படத்தை எப்படி ரிலீஸ் பண்ணுவது என்று திக்கு தெரியாமல் முழித்து வருகிறார்கள்.
ஏனென்றால் இப்படத்தை கௌதம் மேனன் தான் தயாரித்திருக்கிறார். அந்த வகையில் போட்ட காசை எடுக்க வேண்டும் என்றால் வியாபாரம் ஆனா மட்டுமே லாபத்தை பார்க்க முடியும். ஏற்கனவே இப்படத்தில் ஸ்ட்ரீமிங் உரிமையை netflix வாங்குவதற்கு முன் வந்தார்கள். ஆனால் சில காரணங்களால் வாங்காமல் போய்விட்டார்கள். அத்துடன் செயற்கைக்கோள் உரிமையை கலைஞர் டிவி பெறுவதாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கடைசியில் அவர்களும் வாங்கவில்லை. இப்பொழுது வரை இப்படம் வியாபாரம் ஆகாமல் தான் பெரிய ஆபத்தில் இருக்கிறது. இப்படியே போனால் இப்படம் இப்போதைக்கு ரிலீஸ் ஆவதற்கு வாய்ப்பே இல்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். இது என்னடா கௌதம் மேனனுக்கு வந்த சோதனையா என்று யோசித்துப் பார்த்தால் இன்னொரு பக்கம் விக்ரமுக்கும் இது மிகப்பெரிய அடியாக இருக்கிறது.
விக்கிரமும் இப்படத்தை தான் முழுமையாக நம்பி இருந்தார். ஏனென்றால் அவர் நடித்த படங்களும் மக்களிடம் பெருசாக ரீச் ஆகவில்லை. அதனால் இப்படமாவது தன்னை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருந்தவருக்கு இது பெரிய அடியாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் கெளதம் மேனன் மற்றும் விக்ரமுக்கு இந்த ஒரு விஷயம் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது.
Also read: கௌதம் மேனன் கேரியரில் விழுந்த 2 பெரிய அடிகள்.. அவர் பெயரை தட்டிட்டு போன தனுஷ் பெஸ்டி