கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் கடந்த வாரம் வெந்து தணிந்தது காடு திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியானது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த திரைப்படம் தற்போது கலெக்ஷனில் நல்ல லாபம் பார்த்து வருகிறது. மேலும் படம் வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 50 கோடி வரை வசூலித்துள்ளது.
இதனால் இயக்குனர் கௌதம் மேனன் படம் வெளியாகி ஒரு வாரம் கூட முடியாத நிலையில் சக்ஸஸ் மீட் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். அப்போது அவர் பேசிய பேச்சு சில விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஒரு படம் வெளியாகி அதற்கு கிடைக்கின்ற விமர்சனங்கள் அனைத்தும் எங்கள் பிழைப்பில் மண்ணை போடுகிற மாதிரி இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
Also read:எதிர்பார்ப்பை அசர வைக்கும் சிம்புவின் வெந்து தணிந்த காடு.. எவனும் தொட்டு பார்க்க முடியாத ரீ என்ட்ரி
மேலும் நீங்கள் விமர்சனங்கள் கொடுக்காவிட்டால் கூட பரவாயில்லை என்ற ரீதியில் அவர் பேசியிருக்கிறார். இதுதான் தற்போது பலரையும் கடுப்பேற்றியுள்ளது. சினிமாவை பொருத்தவரையில் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவது இயல்புதான்.
அது போன்ற விமர்சனங்களை கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகர்களே ஏற்றுக் கொண்டு விடுகின்றனர். அப்படி இருக்கும்போது கௌதம் மேனன் இவ்வாறு பேசி இருப்பது அவருக்கு எதிர்வினையை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் கௌதம் மேனன் ஒரு காலத்தில் தன்னுடைய படங்களுக்கு மீடியாக்களின் விமர்சனங்களை மிகவும் எதிர்பார்த்தார்.
Also read:சிம்பு பட வாய்ப்பை தட்டி தூக்கிய RJ பாலாஜி.. புதுசு புதுசா பிரச்சினையை கிளப்புறாங்க!
அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு அப்போது நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. அதிலும் சிம்பு மற்றும் த்ரிஷாவின் நடிப்பும், கெமிஸ்ட்ரியும் பலரையும் ரசிக்க வைத்தது. இதனாலேயே மீடியாக்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது.
அதைப் பார்த்த கௌதம் மேனன் அப்போது தன் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கொடுத்த பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு நன்றி தெரிவித்தார். அப்படி எல்லாம் இருந்த அவர் தற்போது பழசை மறந்து விட்டு ஆணவத்துடன் பேசி இருப்பது தான் பலரின் கோபத்துக்கும் காரணமாக இருக்கிறது. இது திரையுலகில் சில சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Also read:சிம்பு உங்க படத்துல நடிப்பதால் டாக்டர் பட்டம் கொடுத்து விட்டீர்களா.? ஐசரி கணேஷ் கூறும் காரணம்