வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்த கௌதம் மேனன்.. வெந்து தணிந்தது காடு இந்த படத்தின் காப்பியா?

கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற வசூல் வேட்டையாடியது.

இதனால் வெந்து தணிந்தது காடு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்த நிலையில் அதை ஈடு செய்யவில்லை என்பது போன்று தான் இப்படத்திற்கான விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை கலாய்த்து இணையத்தில் பல மீம்ஸ்கள் வெளியாகி வருகிறது.

Also Read :மாநாடு வசூலை முறியடித்த வெந்து தணிந்தது காடு.. முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடியா?

இப்படம் கேங்ஸ்டர் சம்பந்தமான கதை களத்தில் எடுக்கப்பட்டிருந்து. இதனால் கமலஹாசனின் நாயகன் படத்தை பிரதிபலிப்பது போன்று சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி வேறு சில படங்களிடமும் ஒப்பிட்டு வெந்து தணிந்தது காடு படத்தை விமர்சித்து வருகிறார்கள்.

அதில் சிலர் விஜய் படத்தை அப்படியே பட்டி டிங்கரிங் பார்த்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன் என்று கூறுகிறார்கள். அதாவது விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜய், இஷா கோப்பிகர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சினிலே.

Also Read :ஹாட்ரிக் வெற்றி பெறுமா சிம்பு, கௌதம் மேனன் கூட்டணி.. வெந்து தணிந்தது காடு முழு விமர்சனம்

இப்படத்தில் குடும்பத்தில் ஏற்படும் வறுமை காரணமாக விஜய் மும்பை செல்கிறார். அங்கு தெரியாமல் தாதா கும்பலிடம் சிக்கி அங்கேயே வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் அதில் கிடைக்கும் பணத்தை தனது குடும்பத்திற்கு அனுப்பி வசதியாக வாழ வைக்கிறார்.

அதேபோல் தான் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு மும்பைக்கு சென்று அடியாளிடம் வேலை செய்வது போன்ற கதைகளம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டு சிம்பு, கௌதம் மேனன் ஆகியோரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Also Read :தளபதியுடன் போட்டி போட்டு தோற்ற சிம்பு.. இதுக்குதான் அப்பவே வேணான்னு சொன்னாங்க

Trending News