சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

எல்லா தப்பையும் நீங்கதான் செய்றீங்க.. இன்றுவரை கௌதம் வாசுதேவ் மேனனால் பாலாப்போகும் படம்

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும், காதலிலும், படத்தின் வசங்களிலும் புதுமையை கொண்டு வந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். 2001 ஆம் ஆண்டு நடிகர் மாதவன், ரீமாசென் நடிப்பில் வெளியான மின்னலே திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.

இவரது இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்காக, சிறந்த படத்திற்கான தேசிய விருதும் இவருக்கு கிடைக்க பெற்றது. மேலும் நடிகர் சிம்புவின் கேரியரை தூக்கி நிறுத்திய படமாக விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப் பெற்றது. மேலும் அண்மையில் சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் காம்போவில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படமும் சூப்பர் ஹிட்டானது.

Also Read: சொந்த வாழ்க்கையில் நடந்ததை படமாக்கிய 3 இயக்குனர்கள்.. கைதட்டலை அள்ளிய கெளதம் வாசுதேவ மேனன்

இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பல வருடங்களாக கிடப்பில் உள்ள ஒரு படம் இடியாப்ப சிக்கலில் மாட்டி தவித்து வருகிறது. கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கம் மற்ற இயக்குனர்களை காட்டிலும் சற்று வித்தியாசம் எனலாம். படப்பிடிப்பிற்கு முன்பு ஒரு ஒன் லைன் ஸ்டோரி வைத்திருப்பார்.ஆனால் படப்பிடிப்பு போக, போக அவரது இஷ்டப்படி கதையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி குழப்பத்தில் தள்ளி விடுவார்.

மேலும் கடைசி வரை இவரது படங்களின் கதை தெளிவாக இருக்காது என்பது இவர் மீது பலரும் கூறும் குற்றச்சாட்டாகும். இது மட்டுமில்லாமல் தற்போது இயக்கத்தை ஓரங்கட்டி விட்டு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில், நடிக்க முற்பட்டு வருகிறார். முக்கியமாக நடிகர் விஜய்யின் நடிப்பில், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Also Read: மலையாளத்தில் ஹிட்டான படத்தை கையில் எடுக்கும் கெளதம் மேனன்.. மரண ஹிட்க்கொடுத்த படமாச்சே!

இதனிடையே சிம்புவின் நடிப்பில் உருவாக உள்ள வெந்து தணிந்தது காடு 2 படத்தின் படப்பிடிப்பு சற்று தாமதமானதால், சிம்புவுக்கும், கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே பொன்னியின் செல்வன் பட நாயகனின் நடிப்பில் , கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள படத்தின் ரிலீஸுக்கு கௌதம் வாசுதேவ் மேனனால் பிரச்சனை எழுந்துள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பல ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருக்கும் படம் தான் துருவ நட்சத்திரம். நடிகர் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் படங்களில் நடிக்க சென்று விட்டதால், இப்போது அந்த படம் ரிலீஸாகாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் நடிகர் விக்ரம் தற்போது செம கடுப்பில் உள்ளாராம்.

Also Read: எவ்வளவு போராடியும் மன வருத்தத்தில் சீயான்.. 2 நல்ல கதைகளை மறுத்த துருவ் விக்ரம் அடைந்த தோல்வி

Trending News