
Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், திறமை இருந்தும் சந்தர்ப்ப சூழ்நிலையால் முன்னேற முடியாமல் தவிக்கும் பெண்களின் லட்சியத்தில் ஜெயித்துக் காட்டி ஒரு புரட்சிகரத்தை உண்டாக்கும் விதமாக கதை ஆரம்பத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் போகப்போக சில இடங்களில் தடுமாறினாலும் பெண்களின் ஆவேச பேச்சாள் நிச்சயம் ஒரு நாள் விடிவுகால பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் குணசேகரின் ஆணாதிக்கமும், கதிரின் அடாவடியும், ஞானம் சுய புத்தி இல்லாமலும், சக்தி பச்சோந்தி மாதிரி குணத்தை மாறிக் கொண்டும் இருப்பதாலும் இவர்களை கல்யாணம் பண்ணிட்டு வந்தவர்கள் பல டார்ச்சர்களை அனுபவித்து இருக்கிறார்கள். தற்போது அதையெல்லாம் தகர்த்து எறிந்து சொந்த காலில் நிற்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.
இதில் ஜனனிக்கு துணையாக இருந்து எல்லா விஷயத்திலும் சப்போர்ட் பண்ணிய சக்தி தற்போது சுயமாக நின்னு எனக்கான வெற்றியை நான் பார்க்க வேண்டும் என்று ஜனனியை விட்டு ஒதுங்கி இருந்தார். ஆனால் தற்போது குந்தவை வந்த பிறகு சக்தி எதற்காக ஜனனியை விட்டு ஒதுங்கி இருந்தாரோ, அதற்கு அர்த்தமே இல்லாத படி குந்தவை என்ன சொன்னாலும் அதற்கு சரி என்று தலையாட்டும் பொம்மையாகத்தான் இப்பொழுதும் இருக்கிறார்.
இதற்கு பேசாமல் பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்பதற்கு ஏற்ப சக்தி ஜனனி கூடவே இருந்திருக்கலாம். ஆனால் குந்தவை செய்வதற்கு பின்னணியில் குணசேகரன் இருப்பது போல் தான் தெரிகிறது. அதனால் தான் சக்தியின் முழு கண்ட்ரோலையும் குந்தவை எடுத்துக் கொள்கிறார். இது தெரியாத ஜனனியும் தடுமாறிய சக்திக்கு உனக்கு இப்ப ஏதோ ஒரு விஷயம் சந்தோஷத்தை கொடுக்கிறது.
அது கடைசி வரை உன் கூடவே இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று உசுப்பேத்தி விடுகிறார். சக்தி என்ன பண்ணுகிறோம் என்று தெரியாமல் குந்தவை சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போட ஆரம்பித்து விட்டார். இதனால் ஜனனி வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்கப் போகிறது. இருந்தாலும் ஜனனிக்கு ஒரு நல்ல தோழனாகவும் ஆறுதலாகவும் கூடிய சீக்கிரத்தில் கௌதம் எண்டரி கொடுக்கப் போகிறார்.
எப்படி கோலங்கள் சீரியலில் அபிக்கு ஒரு தொல்காப்பியன் இருந்தாரோ, அதே மாதிரி ஜனனிக்கு கௌதம் ஒரு நல்ல தோழனாக இருக்கப் போகிறார். இதற்கிடையில் இந்த கதிர் வேற குணசேகரை மறுபடியும் ஜெயிலுக்குள் அனுப்பி விட்டு எல்லா சொத்துக்களையும் அனுபவிக்கணும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார். இது தெரியாத குணசேகரனும் கதிரை கண்மூடித்தனமாக நம்புகிறார். அத்துடன் கதிருக்கு ஜால்ரா அடிப்பதற்கு அறிவுக்கரசியும் கூடவே இருக்கிறார்.