வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஒரே ஆளிடம் சிக்கி கொண்ட கௌதம் மேனன்.. தப்பிக்க முடியாமல் தவிக்கும் கொடுமை

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். டீசன்டான ஹீரோயின், ஹீரோவின் கையில் காப்பு, வித்யாசமான காதல் வசனங்கள் என்றாலே அது கௌதமின் படமாகத்தான் இருக்கும்.

சினிமாவை வேறு தளத்திற்கு எடுத்து சென்ற கௌதம் மேனன் தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்குகிறார். மாநாடு வெற்றியை தொடர்ந்து சிம்புவின் வெந்து தணிந்த காடு படத்தின் க்ளிம்பஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கௌதம் மேனன் வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து சிம்புக்கு இரண்டு படங்களும் சிவகார்த்திகேயன் ஒரு படமும் இயக்குவதாக இருந்தார். ஆனால் தற்போது இருவரும் வேறு படங்களில் பிஸியாக உள்ளார்கள்.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் மேலும் இரண்டு, மூன்று படங்களை இவருக்குத் தர சொல்லி இயக்குனர் கௌதம் மேனனிடம் மிகப்பெரிய தொகையை கொடுத்துள்ளாராம்.

இதனால் ஐசரி கணேஷ், கௌதம் மேனனிடம் ராகவா லாரன்ஸ் வைத்து படத்தை இயக்க சொல்லியிருக்கிறாராம். ஆரம்பத்தில் இருந்தே காதல் படமாக எடுத்து வந்த கௌதம் மேனன் முதல் முறையாக லாரன்சை வைத்து இயக்க உள்ளார். புதிதாக இணைய உள்ள இவர்களது காம்போ எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தற்போது லாரன்ஸ் துர்கா மற்றும் ருத்ரா படத்தில் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்து விட்டு கௌதம் மேனன் படத்தில் லாரன்ஸ் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்

Trending News