வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சிம்பு பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கௌதம் வாசுதேவ் மேனன்.. தெறிக்கவிடும் மாஸ் கூட்டணியில் புதிய படம்!

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தற்போது சிம்புவின் ரசிகர்கள் மாநாடு படத்தின் ரிலீசை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து சிம்பு, கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடிக்கவிருக்கிறாராம். மேலும் சிம்பு கடந்த மூன்றாம் தேதி  தனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினார்.

இந்த நிலையில் சிம்புவின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு இணையத்தில் வெளியாகி, அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதாவது சிம்புவின் கரியரில் உள்ள மிக முக்கியமான படங்களில் ஒன்று  கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஹிட்டுக்கு ஏ ஆர் ரகுமானின் இசையும் ஒரு முக்கிய காரணம்.

இவ்வாறிருக்க, தற்போது விண்ணைத்தாண்டி வருவாயாவில் இணைந்த மாஸ் கூட்டணி மீண்டும் சிம்புவின் 47வது படத்தில் இணைய உள்ளனராம்.  ஆம், சிம்புவின் 47 வது படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க, கௌதம் வாசுதேவ மேனன் இயக்க, ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளாராம்.

மேலும் இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவலை கேட்ட சிம்புவின் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டு இருக்கின்றனராம்.

Trending News