Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், எதிர்பார்த்த கேரக்டர்கள் மறுபடியும் வர ஆரம்பித்துவிட்டது என்று சொல்வதுக்கு ஏற்ப குற்றவை, குந்தவை, வாசு, அப்பத்தா மற்றும் கௌதமும் என்டரி கொடுத்து விட்டார். அதாவது எங்கே போவது, எப்படி ஜெயிப்பது என்று தெரியாமல் தடுமாறி நின்ற நான்கு பெண்களுக்கும் ஜீவானந்தம் உதவும் வகையில் அவருக்கு தெரிந்த வீட்டை கௌதம் மூலம் கொடுத்த அனுப்புகிறார்.
கௌதமை எதிர்பார்க்காத நான்கு பெண்களும் அதிர்ச்சியான நிலையில் ஜனனிக்கு இனி ஒரு நல்ல தோழராக இருந்து தொடர்ந்து உதவி செய்வார். ஏற்கனவே சக்தி, ஆதி குணசேகரன் வாரிசு என்பதை நிரூபிக்கும் வகையில் சுயநலமாக ஜனனியை திட்டிவிட்டு குந்தவையுடன் பழக ஆரம்பித்து விட்டார். அதாவது ஜனனி சக்தியை பார்த்து பேச வந்த பொழுது தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தான் சக்தியின் பேச்சு ஜனனி பக்கம் எல்லா தவறையும் திருப்பி விட்டது.
அடுத்ததாக விசாலாட்சி போட்ட டிராமாவுக்கு மயங்காத நான்கு மருமகளும் வீட்டிற்கு வர முடியாது, பரிகாரத்தையும் செய்ய முடியாது என்று சொல்லியதால் வீட்டுக்கு வந்த அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டார். இதுதான் சான்ஸ் என்று சக்தி மனதில் ஜனனியை பற்றி இன்னும் அதிகமாகவே தவறாக பேசி ஒரு வெறுப்பை ஏற்படுத்தும் அளவிற்கு குணசேகரன் அவர் பக்கம் ஒரு டிராமாவை போட்டு விட்டார்.
ஏற்கனவே சக்தி, ஜனனியை விட்டு தூரமாக போய்விட்டார், இப்பொழுது வீட்டில் இருப்பவர்களும் ஜனனி மீது கோபமாக இருப்பதால் சக்தி முழுமையாக குந்தவை பக்கம் சாய வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் பார்த்த குணசேகரன், ரூம்குள் சென்று ஆதி குணசேகரனிடம் சபதம் போடும் அளவிற்கு இனி பழைய குணசேகரன் எல்லோரும் பார்க்கப் போகிறார்கள்.
எதற்கும் அசராமல், எதைப்பற்றியும் யோசிக்காமல் நான் மறுபடியும் அந்த பெண்களை வீட்டுக்கு கொண்டுட்டு வந்து அடுப்பங்கரையில் போட்டு அடிமைப்படுத்துவேன். நிச்சயம் இனி குணசேகரன் ராஜ்ஜியம் கொடி கட்டி பறக்கும் என்று சபதம் போட்டு விடுகிறார். ஏற்கனவே குணசேகரன் அராஜகத்தால் பெண்கள் முன்னேற முடியாமல் தவிக்கிறார்கள், இன்னும் என்னவெல்லாம் கஷ்டத்தை அனுபவிக்க போகிறார்களோ, ஆனாலும் நிச்சயம் அவர்களுடைய பாதையில் வெற்றி கிடைக்கும்.
Kunasekaran attam adanganum pengal ourai sovyukal adikkanum 😁😁😁