வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மன நிம்மதி இல்லாமல் தவிக்கும் கௌதம் மேனன்.. கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கும் விக்ரம்

Dhuruvanatchathiram: அட இந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது, எதற்காக கௌதம் மேனன் இப்படி அங்காளாய்த்து கொண்டு இருக்கிறார் என ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆறு வருடத்திற்கு முன் எடுக்கப்பட்ட துருவ நட்சத்திரம் படத்தை மீண்டும் தூசி தட்டி கடந்த டிசம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தார் கௌதம் மேனன்.

கடந்த 2016 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட ஐந்து முதல் ஆறு பேர் சேர்ந்து தயாரிக்க ஆரம்பித்த படம் துருவ நட்சத்திரம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இடையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி பிரச்சனையால் ஒவ்வொருவரும் இந்த படத்தில் இருந்து கழண்டு விட்டார்கள். ஆனால் கௌதம் மேனனுக்கு மட்டும் இந்த படத்தை விடுவதற்கு மனசே இல்லை.

துருவ நட்சத்திரம் படத்தை எப்படியாவது திரைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக தான் நடிகர் அவதாரம் எடுத்தார் கௌதம் மேனன். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து அதில் வந்த காசை வைத்து துருவ நட்சத்திரத்தை முடித்ததாக ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். அவருடைய கனவு நனவாகும் நேரத்தில் மொத்தமாக சொதப்பியது ஆல் இன் ஆல் தயாரிப்பு நிறுவனம்.

Also Read:துருவ நட்சத்திரத்தை எப்படி ரிலீஸ் பண்றேன்னு நான் பார்க்கிறேன்.? கோர்ட்டை தாண்டி குடைச்சல் கொடுக்கும் வாரிசு நடிகர்

தங்கள் நிறுவனத்திற்கு கொடுக்கவேண்டிய இரண்டு கோடியே 40 லட்சத்தை கொடுத்து விட்டு படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்று வழக்கு தொடுத்தது. இதனால் துருவ நட்சத்திரம் படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாமல் முடங்கி இருக்கிறது. இதனால் கௌதம் மேனன் மன நிம்மதி இல்லாமல் இருக்கிறார். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாக அவருடைய நெருங்கிய வட்டாரம் சொல்கிறது.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் விக்ரம்

கௌதம் மேனன் இப்போது ஒரு படம் இயக்கிக் கொண்டு இருக்கிறார். துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிப் போனதால் அவரால் அந்த வேலையில் கூட கவனம் செலுத்த முடியவில்லை. எப்போதும் கேரவனுக்குள்ளேயே அமர்ந்திருக்கிறாராம். இந்த படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து பாகங்களை உருவாக்குவேன் என்று சொன்னார். அவருக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என்பது அதிக மன அழுத்தத்தை கொடுத்து இருக்கிறது.

ஒரு இயக்குனர் தன்னுடைய படைப்பை மக்களிடம் கொண்டு சேர்க்க கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறார். படம் ரிலீஸ் ஆனால் கண்டிப்பாக படத்தின் நாயகன் விக்ரம் தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படுவார். அப்படி இருக்கும் பட்சத்தில் தனக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அவர் ஒதுங்கி இருப்பது எல்லோருக்கும் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

Also Read:விக்ரமை நம்பியதால் நாலு வருஷம் நாசமா போச்சு.. தூக்கிவிட்ட ஏணியவே பதம் பார்த்த சியான்

Trending News