ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நிற்க நேரமில்லாமல் வரிசை கட்டும் 4 படங்கள்.. சிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்க தயாராகும் கவின்

Kavin’s Line-up 4 Movies: சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வரும் எல்லோருக்கும் வெற்றி வாய்ப்பு எளிதில் கிடைத்து விடாது. ஆனால் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கேற்ப சிவகார்த்திகேயன், சந்தானம், ரியோ உள்ளிட்டவர்கள் ஹீரோக்களாக ஜெயித்து காட்டி இருக்கின்றனர்.

அந்த வரிசையில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் கவின். லிப்ட், டாடா போன்ற படங்கள் அவருக்கான ரசிகர்கள் வட்டத்தை பெருக்கிய நிலையில் தற்போது அவருடைய கைவசம் ஐந்து படங்கள் இருக்கிறது.

அந்த வகையில் கவினின் நான்காவது படத்தை சதீஷ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். அதை அடுத்து இளன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா நடிப்பில் உருவாகி வரும் ஸ்டார் படம் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

Also read: கவினின் பெயரை கெடுக்க நடக்கும் சதி.. உஷாரா இருந்தா தான் தப்பிக்க முடியும் பாஸ்

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து கவினின் ஆறாவது படத்தை இயக்குனர் நெல்சன் தயாரிக்கிறார். சிவபாலன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அடுத்ததாக அவருடைய ஏழாவது படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். விக்ரனன் அசோகன் இயக்கும் இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இப்படி அடுத்தடுத்து பெரிய ப்ராஜெக்ட்டுகளில் கவனம் செலுத்தி வரும் கவின் விரைவில் சிவகார்த்திகேயன் இடத்தை பிடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். விஜய் டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது மாஸ் ஹீரோவாக மாறி இருக்கிறார். இந்நிலையில் கவின் இவருடைய இடத்தை விரைவில் பிடிப்பார் என்ற கருத்தும் இப்போது எழுந்துள்ளது.

Also read: ஒரு ஸ்டாரால் மற்றொரு ஸ்டாரின் வாய்ப்பை இழந்த கவின்.. திருப்பி அடிக்கும் கர்மா!

Trending News