அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளார் மாதவன். ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ராக்கெட்ரி படம் ஒரு பான் இந்தியத் திரைப்படமாக வெளியானதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர வேண்டும் என்பதற்காக தமிழ் மொழியில் சூர்யாவும், ஹிந்தி மொழியில் ஷாருக்கானும் கேமியோ தோற்றத்தில் நடித்து இருந்தனர். இந்நிலையில் படத்தின் இறுதி காட்சியில் நம்பி நாராயணனிடம் சூர்யா ஜெய்ஹிந்த் என்று சொல்ல வேண்டும்.
ஆனால் சூர்யா எதுவும் சொல்லி இருக்கமாட்டார். இதற்கு பலரும் கேலி செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவை விமர்சித்துள்ளார். அதில், ராக்கெட்ரி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதேபோல் மற்ற மொழிகளிலும் அதே வேடத்தில் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.
மற்ற மொழியில் டயலாக்கின் முடிவில் அனைவரும் ஜெய்ஹிந்த் என்று கூறுகிறார்கள். ஆனால் சூர்யா மட்டும் ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது ஏன்? அவர் இந்தியன் இல்லையா? இந்தியா வாழ்க என்று சொல்வதில் அவருக்கு பெருமை இல்லையா? என்ற கேள்விகளை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார்.
இந்தியாவில் வளர்ச்சிக்காக ஒரு ராக்கெட் ஏவுகணை ஏவப்படுகிறது அதனை வெற்றி கண்டபோது அனைவரும் ஜெய்ஹிந்த் எனக் கூறுவது வழக்கம். மேலும் நாட்டில் இருக்கும் மக்கள் முதற்கொண்டு அனைவரும் ஜெய்ஹிந்த் எனக் கூறுவார்கள்.
ஹிந்தி பதிப்பில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடித்த ஷாருக்கான் கூட ஜெய்ஹிந்த் என கூறுவார். சூர்யா சொல்லாதது தவறு என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் காயத்ரி ரகுராம் பப்ளிசிட்டிக்காக இவ்வாறு செய்து வருகிறார் என சூர்யா ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.