வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சாண்டி மாஸ்டருடன் இணைந்த ஜிபி முத்து.. குத்தாட்டம் போட வைத்த வீடியோ

ஜிபி முத்து இந்த அளவுக்கு பிரபலம் அடைவார் என்று அவரே கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார். அந்த அளவுக்கு அவர் பிக் பாஸில் கலக்கிக் கொண்டிருக்கிறார். எதார்த்தமான பேச்சும், வெள்ளந்தியான நடவடிக்கையும் தான் அவரை ரசிகர்களிடையே அதிக அளவில் பிரபலமாக்கியது. இதனால் அவர் பற்றிய எந்த செய்தி வந்தாலும் அது வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் தற்போது அவர் நடித்திருக்கும் ஒரு ஆல்பம் பாடல் அதிக பார்வையாளர்களை கடந்து பிரபலமாகி வருகிறது. அடிக்கடி ஏதாவது ஒரு ஆல்பம் பாடலை இயக்கி ஆடிக்கொண்டிருக்கும் சாண்டி மாஸ்டர் தற்போது எதுவும் கிடைக்கலைன்னா என்ற மியூசிக் வீடியோவை இயக்கியுள்ளார்.

Also read : யூடியூபால் ஜிபி முத்துவுக்கு கிடைத்த மறுவாழ்வு.. மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

பார்ப்பவர்களை குத்தாட்டம் போட வைக்கும் இந்தப் பாடலில் ஜிபி முத்துவும் நடித்திருக்கிறார். பாடலின் நடுநடுவே ஜி பி முத்து தன்னுடைய ஃபேவரைட் வார்த்தையான நக்கு என்ற வார்த்தையை கூறுவது போன்று இருக்கும் அந்த பாடல் பயங்கர காமெடியாக இருக்கிறது.

ஏற்கனவே ஜி பி முத்து சுனிதா மற்றும் விஜே ரக்ஷனுடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடலில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் இந்த பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிக பார்வையாளர்களை கடந்து அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

Also read : ஜி பி முத்துவை கார்னர் செய்யும் 4 போட்டியாளர்கள்.. ஸ்கெட்ச் போட்டு துரத்த காத்திருக்கும் ஆர்மி

சாண்டி மாஸ்டருக்காக பாடலை பார்த்த நிலை மாறி தற்போது ஜி பி முத்துவுக்கு ஆகவே இந்த பாடலை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். மேலும் ஜிபி முத்து பேசும் அந்த வார்த்தையை கேட்பதற்காகவே பாடலை ரிப்பீட் மோடில் பார்த்து வருகிறோம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இப்பாடல் ஜிபி முத்துவுக்காகவே மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி அடுத்தடுத்து வரும் நாட்களில் இந்த பாடலுக்கு பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து கலக்குவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

குத்தாட்டம் போட வைத்த பாடல் வீடியோ

Trending News