திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ப்ளூ சட்டை மாறனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஜி பி முத்து.. மொத்தமாக அசிங்கப்பட்ட நிலை

Blue Sattai Maran and GP Muthu: சினிமாவில் வெளிவரும் ஒவ்வொரு திரைப்படங்களுக்கும் கருத்துக்களை சொல்லியே பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். அதிலும் அந்தப் படத்திற்கு மட்டுமில்லாமல் அதில் நடித்து வந்தவர்களையும் தாறுமாறாக தாக்கி பேசக்கூடியவர். அதனாலையே இவர்மேல் நிறைய குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இவருடைய கருத்துக்களை தெரிவித்துக் கொண்டே வருவார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான பம்பர் திரைப்படத்தை இவர் ஸ்டைலில் எப்பொழுதும் போல விமர்சனம் செய்திருக்கிறார். இந்த படத்திற்கு ரொம்ப நெகடிவ் ஆன விமர்சனங்களை கொடுக்காமல் பாஸ்டிவ்வான கருத்துக்களை கொடுத்திருக்கிறார்.

Also read: ஒரே சமயத்தில் தலைவர், தளபதி விசுவாசிகளை வெறுப்பேற்றிய ப்ளூ சட்டை.. அநியாயத்திற்கு கலாய்த்து போட்ட ட்விட்

அதோடு விடாமல் இந்த படத்தில் அவ்வப்போது ஒரு பன்னி குறுக்கே மறுக்க வந்து கொண்டிருக்கிறது. அந்தப் பன்னியை மட்டும் அடித்துக் கொண்டிருந்தால் இன்னும் படம் நன்றாக இருந்திருக்கும் என்று அநாகரீகமான வார்த்தையால் ஜி பி முத்துவை தாக்கி பேசி இருக்கிறார்.

இதைக் கேட்டு சும்மா விடுவதற்கு ஜி பி முத்து என்ன மற்ற நடிகர்கள் போல இமேஜ் பார்க்கக் கூடியவரா? அதனால் இவருடைய ஸ்டைலில் ப்ளூ சட்டை மாறனுக்கு சரியான பதிலடி கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ப்ளூ சட்டை மாறன் நன்றாக படத்தை விமர்சனம் செய்திருந்தாலும் அவர் யாரைப் பன்னி என்று சொல்லி இருக்கிறார் எனக்குத் தெரியும்.

Also read: அத்தி பூத்தார் போல் நச்சுன்னு விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை.. வேண்டுமென்றே குட்டையை குழப்பும் பயில்வான்

அந்தப் பன்னி திருப்பி கடித்தால் என்ன ஆகும் தெரியுமா என்று மிகவும் கோபத்துடன் எச்சரிக்கை விட்டு இருக்கிறார். மேலும் தேவை இல்லாமல் என்னை சீண்டிப் பார்க்க வேண்டாம். இல்லையென்றால் நான் சும்மா விட மாட்டேன் என்று கடுமையாக பேசி ப்ளூ சட்டை மாறனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறார்.

இவர் பேசிய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகிக் கொண்டு வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் அசர்கிற ஆளா ப்ளூ சட்டை மாறன். இதெல்லாம் தூசி போல தட்டி விட்டு அசால்டாக போகக்கூடியவர்.

Also read: இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ப்ளூ சட்டை பாராட்டிய நடிகர்.. இது என்ன புது உருட்டா இருக்கே!

Trending News