திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

வீட்டை விட்டு வெளியேற துடிக்கும் ஜிபி முத்து.. மொத்த டிஆர்பி-யும் போயிடும் என கெஞ்சும் பிக் பாஸ்

ஆண்டவரின் பத்தல பத்தல பாடலுடன் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் பத்தாம் நாள் அமோகமாக தொடங்கியது. ஆரம்பத்திலேயே குயின்சி அமுதவாணனிடம் போன வாரம் நடந்த விஷயத்தை இன்னும் புலம்பி கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து கதிரவன் மற்றும் விக்ரமன் இருவரும் சேர்ந்து மாரி பாடலுக்கு அட்டகாசமாக டான்ஸ் ஆடினார்கள்.

அதில் விக்ரமனுக்கு அதிக ஓட்டு கிடைத்தது. அதன் பிறகு சாப்பிட்டுக் கொண்டிருந்த மைனாவுக்கு காரம் அதிகமாகி மூக்கில் தண்ணீர் வந்துவிட்டது. அதனால் ஓரமாக போய்க் கொண்டிருந்த ஜிபி முத்துவை ரகசியம் சொல்வது போல் கூப்பிட்டார். அவரும் வெள்ளந்தியாக அவர் பக்கத்தில் போய் உட்கார, பேசுவது போல சென்ற மைனா மூக்கை அவர் சட்டையில் துடைத்து விட்டார். இதனால் கடுப்பான தலைவர் மைனாவை திட்டிக்கொண்டே சட்டையை துவைக்க சென்றார்.

அதன் பிறகு ஷெரினா வயிற்று வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே வந்தார். அதை பார்த்த ராபர்ட் சாதாரண வலியா இல்ல டான்ஸ் ஆடணும்னு வந்த வலியா என்று அடுக்குமொழியில் பேசினார். இதனால் கோபமான ஷெரீனா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். பெண்கள் அழுதால் தாங்க முடியாத ராம் உடனே ஓடி வந்து சமாதானப்படுத்த தொடங்கினார்.

Also read : கோளாறின் அராஜகத்தை தட்டிக் கேட்கும் தனலட்சுமி.. பற்றி எரியும் பிக்பாஸ் வீடு

அவருக்கு போட்டியாக அசீம் பிக்பாஸ் இடம் சைகையில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். உடனே பிக் பாஸ் எதா இருந்தாலும் மைக்க மாட்டிட்டு சொல்லுங்க என்று கலாய்த்தார். இதைக்கேட்ட ஷெரினா ஒருவழியாக அழுகையை நிறுத்திவிட்டு சிரிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் செரினாவின் அழுகையை நிறுத்திய பெருமை பிக்பாசுக்கு மட்டுமே உண்டு.

அதன் பிறகு கதை சொல்லும் டாஸ்க்கில் மைனா நந்தினி, மகேஸ்வரி, கதிரவன், ஷிவின், அமுதவாணன் ஆகியோர் பேசி போட்டியாளர்களை கவர்ந்தார்கள். அதைத்தொடர்ந்து லிவிங் ஏரியாவுக்கு லேட்டாக வந்த ஜிபி முத்துக்கு பிக் பாஸ் ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று கிளாஸ் எடுத்தார். அதைக் கேட்ட ஜிபி முத்து இனிமேல் என்னுடைய ஆட்டத்தை பாருங்க என்ற ரேஞ்சுக்கு திரிந்து கொண்டிருந்தார்.

இதற்கு இடையே ஆயிஷா, குயின்சி, நிவாஷினி, அமுதவாணன் ஆகியோரின் ஆடல் பாடலும் நடைபெற்றது. அதில் கரகாட்டம் ஆடிய ஜோடியில் அமுதவாணனுக்கு வெற்றி கிடைத்தது. இதனால் சற்று வருத்தத்தில் இருந்த நிவாஷினியை அனைவரும் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது வந்த அசல் நான் உனக்கு ஓட்டு போடவில்லை எனக்கு அமுதுவின் ஆட்டம் தான் பிடித்தது என்று கூறினார்.

Also read : பிக்பாஸில் கணவரை பற்றி வாய் திறக்காத ரக்ஷிதா.. பிரிவுக்கு இப்படியெல்லாம் ஒரு காரணமா!

அதனால என்ன அது உன்னோட விருப்பம் என்று கூறியவரிடம் அசல் வலுக்கட்டாயமாக ஏதோ பேசி உளறிக் கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து ஜிபி முத்து தன் குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாமல் கஷ்டப்படுவது அவர் முகத்திலேயே நன்றாக தெரிந்தது. அதனால் அவர் சக போட்டியாளர்களிடம் நான் கதை சொல்லும் போது பஸ்ஸரை அழுத்தி விடுங்கள் நான் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இதை எதிர்பார்க்காத ஹவுஸ் மேட்ஸ் அவரை சமாதானப்படுத்தினார்கள். மேலும் பிக் பாஸ் அவரை தனியாக கூப்பிட்டு உங்கள் வீட்டில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் என்று சமாதானப்படுத்தினார். ஏனென்றால் ஜி பி முத்துவுக்காக மட்டும்தான் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி உயர்ந்து கொண்டிருக்கிறது. அதை தக்க வைத்துக் கொள்ளவே பிக்பாஸ் இப்படி அவரிடம் கெஞ்சாத குறையாக பேசிக் கொண்டிருந்தார். அதன் பிறகு சமாதானமான ஜி பி முத்து அமைதியாகவே அந்த நாளை கடந்தார். இப்படியாக பிக் பாஸ் வீட்டின் பத்தாம் நாள் அமைதியும், குழப்பமுமாக சென்றது.

Also read : நாமினேஷனில் இருந்து தப்பிக்க போராடும் ஹவுஸ் மேட்ஸ்.. போட்டியாளர்களை திருப்பி அடிக்கும் கர்மா

- Advertisement -spot_img

Trending News