தமிழ் சினிமாவில் எத்தனையோ புதுப்புது தயாரிப்பாளர்கள் வந்தாலும் ஜெமினி புரோடக்சன்ஸ் ஏ.வி.எம் புரோடக்சன்ஸ் அத்தனை எளிதில் யாருக்கும் மறந்து விடாத நிறுவனங்கள் தான்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏவிஎம் குமரன் அவர்கள் நம்மோடு கலந்துகொண்ட பல்வேறு விடயங்களை ரசிகர்களிடம் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அப்போதெல்லாம் ஒரு படத்தை பல மொழிகளில் வெளியிடுவது என்பது அத்தனை எளிதல்ல அப்படியாக ஒரு மொழிக்கதையும் பல மொழிகளில் ரிமேக் செய்யப்படுவதும் மிகமிக குறைவே.
அந்த மாதிரியான ஒரு இக்கட்டான சூழலில் ஜெமினி புரோடக்சன்ஸ் எல்லோரும் நல்லவரே என்ற படத்தை வெளியிட்டது தமிழ் தெலுங்கு இந்தி மொழிகளில் வெளியான இப்படம் மிகச்சொற்பமான வசூலையே ஈட்டியதாம்.
ஏற்கனவே ஏ.வி. எம் நிறுவனம் வாழ்க்கை என்ற படத்தை மூன்று மொழிகளில் ரீமேக் செய்திருந்ததாம். ஆனால் அவை யாவும் தனித்தனியே எடுக்கப்பட்டது என்றும் கூறினார். ஆனால் ஜெமினி நிறுவனம் அப்போது முத்துராமன் மஞ்சுளா கூட்டணியில் எடுத்து முன்று மொழிகளிலும் தயார் செய்தது.
தமிழில் சுமாரான கலெக்சன் என்றாலும் மற்ற மொழிகளில் ஒன்றும் தேறவில்லை என்றே கூறலாம் என்றார். அதனை தொடர்ந்து ஏ.வி.எம் சார்பில் எடுக்கப்பட்ட ‘பெண்’ என்ற படம் முன்று மொழிகளில் தயாரானது என்றும் அதுவும் பெரும் தோல்வியையே தந்தது என்றும் கூறினார்.