1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஜென்டில்மேன். இது ஷங்கரின் முதல் படமும் கூட. ஏ ஆர் ரகுமான் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.
அதுபோக கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. சங்கரின் முதல் படம் என்பதால் தன்னுடைய படத்தை பார்த்து பார்த்து செதுக்கினார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுபஸ்ரீ.
கிளாமர் கதாபாத்திரமாக இருந்தாலும் அன்றைய கால ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக மாறினார். அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவான முத்து படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் தமிழை விட தெலுங்கில் அதிகமாக பேசப்பட்டார். அதற்கு காரணம் தெலுங்கில் கிளாமர் நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த வகையில் சுபஸ்ரீ தெலுங்கில் ஒரு நல்ல இடத்தை பிடித்தார்.
அதன் பிறகு ஹீரோயினாக எங்கேயும் தன்னால் வெற்றி கொடுக்க முடியாததால் ஒரு கட்டத்தில் மார்க்கெட் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். நீண்ட நாட்களாக இவரைப்பற்றி ரசிகர்களுக்கு எதுவும் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள போது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஜெண்டில்மேன் மற்றும் முத்து படத்தில் எவ்வளவு அழகாக சிக்கென்று இருந்தாரோ தற்போது இதற்கு நேரெதிராக உடல் எடை கூடி ஆளே மாறிவிட்டார்.
