புதன்கிழமை, ஜனவரி 1, 2025

ஜென்டில்மேன் படத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகர்கள்.. பின்பு அர்ஜுனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயர் பெற்றவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன.

ஆனால் சமீபகாலமாக ஷங்கர் படங்களுக்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்தியன் 2 படத்தின் விவகாரமும் பெரிதாக வெடித்தது. தற்போது வரை இதற்கு விடை தெரியாமல் இருந்து வருகின்றன.

ஜென்டில்மேன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது சரத்குமார். ஆனால் அப்போது சரத்குமார் புகழின் உச்சத்தில் இருந்ததால் இவர் அதிகமாக சம்பளம் கேட்பார் என ஷங்கர் புறக்கணித்துள்ளார்.

sarathkumar rajasekhar
sarathkumar rajasekhar

அதன் பிறகு தெலுங்கு நடிகர் ராஜசேகரை முதலில் படத்தில் நடிக்க வைக்க முடிவு எடுத்துள்ளனர். ஆனால் இப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.

பின்பு என்ன செய்வதென தெரியாமல் ஷங்கர் அதன்பிறகு ஆக்ஷன் கிங் அர்ஜுன் தேர்வு செய்துள்ளார். படம் முடிந்த பிறகும் நிறைய சங்கடங்கள் சந்தித்து உள்ள படம் டப்பிங் படம் போல் இருக்கிறது என அனைத்து டிஸ்ட்ரிபியூட்டர் வாங்க முன்வரவில்லை.

அதுமட்டுமில்லாமல் ஜென்டில்மேன் படத்தின் தயாரிப்பாளர் குஞ்சு மோகன் அகிரீமெண்ட் மூலம் ஷங்கருக்கு சில கண்டிஷன்கள் போட்டுள்ளார்.

அதாவது படத்தில் தேவைப்பட்டால் எழுத்தாளர் பாலகுமாரன் சேர்த்துக் கொள்வேன் என்றும் அதுமட்டுமில்லாமல் கதையில் ஒரு சில மாற்றங்கள் கூட செய்வேன் எனவும் வெளிப்படையாக கூறி ஒப்பந்தம் செய்துள்ளார்.

Trending News