திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

விஜயை ஒழித்து அவர் சாதனையை தடுக்க வேண்டும்.. பகடைக்காயான அஜித்.!

இந்த பொங்கலுக்கு எப்பொழுதும் போல விஜய் படமும், அஜித் படமும் வெளிவரும் என தெரிந்த பின்பு ஒரு சில பிரச்சனைகள் சில அடிதடிகள் மட்டும் நடக்கும் என்று நினைத்த பொழுது. புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பினார் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜ். அதிலிருந்து தொடங்கியது இந்த பூதாகரமான பிரச்சனை.

அதேபோல் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்க முயற்சி செய்து அதை தடுத்து நிறுத்தினார் விஜய் காரணம் பீஸ்ட் பட இப்பிரச்சினையில் உதயநிதியை பழிவாங்க இப்படி செய்தார். இதனால் உதயநிதி துணிவு படத்தை வாங்கி அந்த படத்தை அனைத்து தியேட்டர்களிலும் வெளியிட செய்து வாரிசு படத்தை அடக்க முயற்சி செய்தார்.

Also Read : அஜித்துடன் இணைந்த விஜய் பட வில்லன்.. அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து மிரளவிடும் ஏகே62

ஆனால் எது எப்படியோ படம் பொங்கலுக்கு வெளியாகப் போகிறது தியேட்டர்கள் பிரித்து கொடுக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக பெரிய நடிகர்களுக்கு நள்ளிரவில் ரசிகர்களுக்காக வைக்கப்படும் காட்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த காட்சிக்கு துணிவு படத்திற்கு ஒரு மணி, என்றும் வாரிசு படத்திற்கு காலை 4 மணி என்றும் கணக்கிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டது.

ஆனால் இது இரண்டு நாட்களுக்கு முன்னரே இந்த பிரச்சினையை ஆரம்பித்து 2 பட தயாரிப்பாளர்களும் சண்டையிட்டு கடைசியில் தில் ராஜ் வைத்தால் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வைக்க வேண்டும் இல்லை என்றால் பிரச்சினை நடக்கும் என்று கூறி சென்றுவிட்டார். அதனால் சுமுகமாக இந்த பிரச்சினை முடிக்கப்பட்டது. பின்னர் போனிகபூர் மறுபடியும் இந்த பிரச்சினையை பேசி மீண்டும் அவர்களின் மனதை மாற்றி1 மணி, 4 மணி என மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை வெளியிட்டார்.

Also Read : வெளிநாட்டில் துணிவு படத்திற்கு தடை ஏன் தெரியுமா.? விஜய்க்கு இருக்கும் மாஸ் தான் காரணமா?

இதை பார்த்த விஜய் பட தயாரிப்பாளர் அதிர்ந்து போனார். இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு எல்லாம் முக்கிய காரணம் விஜய்யை ஒழிக்க வேண்டும், விஜய் பட சாதனையை உடைக்க வேண்டும், மறுபடியும் விஜய் சாதனை தொடரக்கூடாது என்று அஜித்தை வைத்து இதை செய்து வருகிறார்கள். ஆனால் இன்னும் தமிழக அரசு இந்த செய்தியை இந்த நேரத்தினை உறுதிப்படுத்தவில்லை என்பது முக்கியம்.

இந்த விஷயம் ஏதும் தெரியாமல் விஜய் மௌனம் காத்து வருவது இன்னும் இந்த பிரச்சனையை பெரிதாக வளர்க்க நேரிடும். இன்னொரு முக்கியமான ஒரு விஷயம் இந்த மாதிரி பிரச்சினைகளில் இருந்து தான் ஒரு நடிகன் தனது ரசிகர்களை பயன்படுத்தி அரசியலுக்கு வருவார்கள். விஜயும் இந்த படத்தில் ஏற்படும் அவமானத்தை நினைத்து கோபப்பட்டு அரசியலுக்கு வந்து விடுவார் என பேசப்படுகிறது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் நாட்டிற்கு நல்லதா என்று மக்கள் யோசிக்க வேண்டும். விஜயை பழி வாங்கும் மற்றவர்களும் யோசிக்கவேண்டும்.

Also Read : மீண்டும் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு பிடிவாதம்.. கடுப்பில் விஜய் செய்த வேலை

- Advertisement -spot_img

Trending News